தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உள்ளப்பூர்வ நன்றிகள் - நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதி அடைந்துள்ள 1500 TET நிபந்தனை ஆசிரியர் குடும்பங்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2019

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உள்ளப்பூர்வ நன்றிகள் - நீண்ட நாட்களுக்குப் பின் நிம்மதி அடைந்துள்ள 1500 TET நிபந்தனை ஆசிரியர் குடும்பங்கள்.


நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் TET நிபந்தனை ஆசிரியர்கள் சுமார் 1500 பேருக்கும் பாதகமான சூழல் ஏற்படாமல் தமிழக அரசு கருணை உள்ளத்துடன் பாதுகாப்பு தரும் என்றார்.

இந்த அறிவிப்பு மூலமாக கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலாக நிம்மதி இல்லாமல் மன உளைச்சலுடன் இருந்த 1500 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் மனமுவந்து நன்றிகளையும், மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சருக்கும் தெரிவித்து வருகின்றனர்.

RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் TET தேர்ச்சி என்பது அவசியம்.

தமிழகத்தில் அரசாணை எண் 181 பிறப்பித்து இருந்தாலும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற செயல்முறைகள் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் 16/11/2012 ல் தான் தெரிவிக்கப்பட்டது.


ஆக 23/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு TET பற்றிய நிபந்தனைகளை தமிழக அரசு முழுமையாக தெரிவிக்காமல் ஒப்புதல் அளித்தது.

இதை தமிழக அரசு உதவிபெறும் பள்ளிகள் செயலாளர்கள் சங்கம் கடந்த வாரம் உறுதிப்படுத்தினர்.


இந்த சிக்கலான சூழலில் TET லிருந்து முழுவதும் விலக்கு கேட்டு பல்வேறு வழக்குகள் இன்றும் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளித்தது போல 1500 அரசு உதவிபெறும் ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் காலாண்டு தேர்வு விடுமுறையில் பணியிடை/ புத்தாக்கப் பயிற்சி தந்து ஆசிரியர்களை தகுதிப்படுத்தும் விதமாக பயிற்சி தர வேண்டும் எனவும், அதற்கு தமிழக அரசு கொள்கை முடிவில் மாற்றம் செய்து இந்த பாதிக்கப்பட்ட 1500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் காக்கும்படி TET லிருந்து முழுவதும் விலக்கு வேண்டும் என TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.



இது பற்றி பிரபல கல்வியியலாளர் திரு.சிவபதி அவர்கள் கூறுகையில்,


 "பாதிக்கப்பட்ட ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் TET - 150 கேள்விகள் மூலமாக தகுதியை நிர்ணயம் செய்வது சரியான தீர்வு அல்ல எனவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்கள் தங்களை புதுப்பிக்கும் விதமாக பல்வேறு கல்விக் கூட்டங்களில், Seminars, Paper presentation உள்ளிட்ட விசயங்களில் தமிழக அரசானது கண்காணிப்பு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் தரலாம். அதற்கான பயிற்சிகள் மற்றும் கல்வி நுட்பங்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தரலாம்.


1500 ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு அளிக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்தாலே TET தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.


காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து முழுவதும் விலக்கு தர தமிழக அரசு முன்வந்தால் சுமார் 1500 ஆசிரியர்கள் குடும்பங்கள் காக்கப்படும். தமிழக அரசுக்கு எதிராக இவர்கள் வழக்கு தொடுக்கவில்லை. வாழ்வாதாரம் போய் விடுமோ என்ற அச்சத்தில் தான் தொடுத்து உள்ளனர். தமிழக அரசு கருணை காட்டும் பட்சத்தில் வழக்குகள் அனைத்தும் முழுவதும் தானாகவே ஒன்றும் இல்லாமல் போய்விடும்" என்றார்.



மேலும்
காலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள் தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த உறுதியால் சற்றே ஆறுதலும் மன நிம்மதியும் அடைந்து உள்ளனர்.

15 comments:

  1. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு கோடானகோடி நன்றிகள்...
    சக ஆசிரியர்களின் மனக்குமுறல்கள் எங்களை தினமும் கலங்க வைத்தது. அவர்களின் துயர்துடைத்து அவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்த அம்மாவின் அரசுக்கு நன்றிகள் பல...

    இங்ஙனம்
    அம்மாவால் வாழ்வு பெற்ற
    2014 TET ஆசிரியை

    ReplyDelete
  2. அமைச்சர் பேச்சை கேட்டு ஆறுதல் அடைய முடியாது. NCERT tet ல் இருந்து விலக்கு அளித்தால் மட்டுமே வேலை உறுதி செய்ய முடியும்.

    ReplyDelete
    Replies
    1. தேவை இல்லை 82 மதிப்பெண் சொல்லும் போது NCERT கேட்ட அறிவித்தார்கள்

      Delete
  3. ivan oru cheating nu ungaluku theriyatha..?Go vanthiruka..?

    ReplyDelete
  4. Evarkalukku ter villakku alithal matruthiranalikalukkum tet vilakku alikka vendum,ellai enral avarkalin. Salaryai kuraiikka venndum,avarkalai thukkivittu tet passs seithullavarkalai poda venndum,

    ReplyDelete
  5. Ivan sonnathu Ethiopian nadanthuruku

    ReplyDelete
  6. ethu nadanthalum nallathe nadakkattum

    ReplyDelete
  7. ஆக மொத்தம் நீங்க டெட் ல 150 க்கு 82 மார்க் கூட எடுக்க மாட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. எடுத்து மட்டும் என்ன பலன்?

      Delete
  8. இது வரைக்கும் அவர் சொன்னதை செய்ததில்லை...

    ReplyDelete
  9. தங்களின் நிலை மிகவும் பரிதாபம்.

    ReplyDelete
  10. Valiku ponavanukku our satan pokathavanuku our sattam.pongkada negative our government

    ReplyDelete
  11. நிபந்தனை ஆசிரியர்கள் யார்.. மேனேஜ்மென்ட் பள்ளிகளில் பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள்தானே..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி