இயக்குநர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் - கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 33 அறிவுரைகள்! - kalviseithi

Sep 17, 2019

இயக்குநர்களின் காணொளி காட்சி கூட்டத்தில் - கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட 33 அறிவுரைகள்!


கடந்த 13.09.2019 அன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குநர் அவர்கள் தொடக்க கல்வி இணை இயக்குநர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்.அதில் கீழ்கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்.

1.இரண்டாம் பருவம் துவங்கும் முதல் நாளான 3 10 2019 அன்று அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் பயமெட்ரிக் அட்டனன்ஸ் ஆசிரியர்கள் இடவேண்டும்.

2.காலதாமத வருகை இல்லாமல் இருக்க வேண்டும். எதிர் காலத்தில் மாணவர்களின் நன்னடத்தை சவாலாக உள்ளது. நல்லொழுக்க கதைகள் கூறவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் பொருத்தமான கதைகள் கூறவேண்டும்.

3.தமிழக அளவிலும் தேசிய அளவிலும் நடத்தும் தேர்வுகளில்நிறைய பேர் வெற்றி பெற உழைக்க வேண்டும்.

4.இந்த வாரம் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இன்ஸ்டால் செய்து அதனை சோதனை செய்து பார்க்க வேண்டும்.

5.அதற்குத் தேவையான அந்தந்த ஆசிரியர்களுக்கு உள்ள பர்சனல் டீடைல்ஸ் ஆபீஸ் டீடெயில்ஸ் அனைத்தும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

6. டிஎன் டிபியில் ஆசிரியர்களின் படைப்புகளை பதிவேற்றம் செய்தும், அதிலிருந்து பதிவிறக்கிமாணவர்களுக்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும்.

7.பள்ளிகள் மூடப்படுவது தடுப்பதற்கு ஆசிரியர்கள் நம்முடைய கடமையை சரியாக செய்ய வேண்டும் மாணவர்கள் இல்லாமல் எந்த பள்ளியும் இயங்காது.

8.கவர்மெண்ட் சிஸ்டத்தை டெவலப் செய்யக்கூடிய ஆற்றலும் சக்தியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. அதனை சரியாக செய்யவும.
ஆசிரியர்களைஅலுவலர்கள் ஆசிரியர்களை மோட்டிவேட் செய்ய வேண்டும் அதே போல் மாணவர்களை ஆசிரியர்கள் மோட்டிவேட் செய்யவேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் எஸ்எம்சி கூட்டத்தை பயன்படுத்தி சிறப்பாக கல்வி செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

9.ஆசிரியர்களுக்கு போடப்பட்ட அரசாணை, ஆணையின்படி உடனே அனைவரும் பணியாற்ற வேண்டும்.

10.காமராஜர் விருது தகுதியுள்ள கம்ப்யூட்டர்  knowledge , ஐசிடி.பள்ளி செயல்பாடுபோன்றவைகளில் திறமையான ஆசிரியர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

11.19,20 ஆகிய தேதிகளில் ஆடிட் சம்பந்தமாக ஜாயிண்ட் சிட்டிங் உள்ளது. அப்ஜெக்ஸன்ஏதும் இருந்தால் அதை உடனே சரிசெய்ய வேண்டும்.

12.2000. நிதி உதவி பெறும்பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.அங்கிகாரமில்லாது உதவி பெறும் பள்ளிகளுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்க கூடாது.

13.ஸ்டபிலிடி லைசன்ஸ் fire, sanitary போன்ற சான்றுகள்  பெற்று உடன் அதற்கான பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

14. கருணை அடிப்படை வேலைக்கு பணிஇடம் ஒதுக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக தேவையானவர்களிடம் கருத்துருக்களை பெற்று  அனுப்ப வேண்டும்

15.மாடல் ஸ்கூல் அதற்குரிய போஸ்டிங் தேவையெனில்.கருத்துரு அனுப்பவும்.

16. நீதிமன்ற வழக்கு. DCA file பண்ண வேண்டும்.

17.கல்வி சேனல் என் 200.அதனை கல்வி டிவி சேனலை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

18.ஆசிரியர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட உள்ளது.முதன்மை செயலர் அவர்களின் உத்தரவுக்கு இணங்க அனைத்து பள்ளிகளும் ஸ்போக்கன் இங்கிலீஷ் நடைபெற வேண்டும் வாரம் ஒருமுறை 1 முதல் 5 வகுப்பு ஒரு பிரிவாகவும் 6 முதல் 8 வகுப்பு ஒரு பிரிவாகவும் 9 10 ஒரு பிரிவாகவும் 11 12 ஒரு பிரிவாகவும் ரெடியாக உள்ளது அதற்கு modules  ஆசிரியர்களுக்கு வழங்க பட உள்ளது.

19.பயிற்சி வழங்கப்பட உள்ளது வீடியோஸ் அப்லோட் செய்து அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயன்படும் வகையில் செய்யவேண்டும் இரண்டு வாரத்தில் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

20.டீச்சர் ப்ரொபைல் அப்டேட் பண்ண வேண்டும்.

21.எலிமெண்டரி teacher profile சரியாக பதிவேற்றம் செய்யவில்லை என்ற குறைபாடு உள்ளது அதை உடன் சரி செய்ய வேண்டும்.

22.டீச்சர்ஸ் ப்ரொஃபைல் ஏமிஸ்.தினந்தோறும் அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும். இனி வரும் நாளில் அனைத்தும்எமிஸ் மூலம் நடைபெற வேண்டும்.

23.நான்கு ஐந்து தேதிகளில்.அறிவியல் கல்வி மூலம் இஸ்ரோ ஒரு பயிற்சி நடத்த உள்ளது. ஈரோட்டில் நடைபெறும்.அந்த கண்காட்சியை பார்க்க பக்கத்து மாவட்டங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். பாதுகாப்பு முறைமைகள் சரியாக வைத்து கொண்டு செயல்படவும்.

24.ஸ்டேட் லெவல் மற்றும் inter state level போட்டி நடைபெறும்.அதில்தென்னிந்திய அறிவியல் கண்காட்சி ( southern science fair) நடைபெறும். அறிவியல் மனப்பான்மையைமாணவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும்.

25.கனவு ஆசிரியருக்கான கருத்துருக்களை 10 10 2019க்குள் அனுப்பவும்.

26. one bad news,ஒரு சோகமான நிகழ்ச்சி எலக்ட்ரிக் ஷாக் அடித்து மாணவர் இறந்துள்ளார். மாணவரின் உயிரை திரும்ப கொடுக்க முடியாது .ஆகவே ஆசிரியர்கள் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பலமுறை சுற்றறிக்கை விட்டும் இதுபோல் நடைபெறுவது எவ்வாறு?. மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமான ஒன்று.

27.3 ,4 ,5 வகுப்பு குழந்தைகளுக்கு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி கொடுக்கப்பட உள்ளது. போட்டிகள் வைத்து உயர்நிலை மேல்நிலைப் பள்ளி போல் பரிசுகள் வழங்கப்படும். rmsa நிதி பயன்படுத்தி கொள்ளலாம்.

28.பெண்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில் நாப்கின் பயன்பாட்டை மாணவிகளுக்கு ஆசிரியைகள் எடுத்துக்கூற வேண்டும்.உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.நாக்கின் எந்திரமாக 4527 வழங்கப்பட்டுள்ளது.

29.கோர்ட் கேஸ் பெண்டிங் இல்லாமல் டிசிஏ உடனே பைல் பண்ண வேண்டும்.

30.அலுவலகத்தில் ஸ்டாக் பைல் ஜிஓ அனைத்தும் இருக்க வேண்டும் அனைவரும் ஜிஓவின் அடிப்படையில் தன்னுடைய பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

31.எந்த ஒரு செய்தியும் தொலைபேசி வழியாக கூறுதல் ஆகாது. ஆகவே தகவல் மட்டுமே எழுத்துப்பூர்வமாக தங்கள் கொடுக்கக்கூடியது மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.

32.pcraபோட்டிகளில் பவர்கிரிட் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க செய்ய வேண்டும் Nmmsதேர்வுகளில் அதிக பேர் கலந்து கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

33.மைனாரிட்டி மாணவர்களை அப்லோட் செய்ய வேண்டும் ரெனிவல் செய்தலும்.

மேற்காணும் உத்தரவு, தகவல்களும் இயக்குநரால் வழங்க பட்டுள்ளது. மேலும் அடுத்த கூட்டம் கல்வி துறை செயலர் அவர்களால் நடத்தப்பட உள்ளது. அதற்குள் இப்பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் படி கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. Point eight is very important and all teachers implement to this

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி