அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்திகொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் - kalviseithi

Sep 24, 2019

அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்திகொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்


தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதுவரை, பள்ளிகளில்வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் திறந்ததும், அக்., 3 முதல், காந்தி ஜெயந்தி விழாவைநடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி