தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2019

தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்கள் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!


வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை கணக்கெடுக்கும் பணியை, பொதுப்பணித்துறை துவங்கி உள்ளது.மாநிலம் முழுவதும் அரசு பள்ளி கட்டடங்களை, மாநில அரசின்நிதி வாயிலாக மட்டுமின்றி, நபார்டு வங்கி கடனுதவியுடன் பொதுப்பணித் துறையினர் கட்டியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும், அரசு கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதியில், பள்ளி கட்டடங்களிலும் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. தற்போது, மாநிலம் முழுவதும் கட்டப்பட்ட, பல்வேறு பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.வெள்ள அபாய காலங்களில், பொதுமக்களும், இந்த கட்டடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, அரசு பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, சேதமடைந்த கட்டடங்கள் குறித்து, 10 நாட்களில் கணக்கெடுக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.சேதமடைந்த பள்ளிகளில், மழைக்கு முன், தற்காலிக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி