"நெட்" தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! - kalviseithi

Sep 9, 2019

"நெட்" தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!!


தேசிய அளவிலான கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான தகுதி தேர்வு எனப்படும் நெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி' (NATIONAL TESTING AGNECY- NAT) நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு முறை நெட் தேர்வை  நடத்துகிறது.

இந்நிலையில் மத்திய நெட் தேர்வுக்கு இன்று (09/09/2019) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 தேதி என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை செலுத்துவதற்கு அக்டோபர் 10- ஆம் தேதி கடைசி நாள். எனினும் தேர்வு தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

விண்ணப்பிக்க க்ளிக் செய்யவும்

https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி