விரைவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi

Sep 5, 2019

விரைவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்


90 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கும் விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் 377 ஆசிரியர்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறுவதாவது;ஆசியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்குவார். 90 ஆயிரம் பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுடன் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பல திட்டங்களை தீட்டினாலும் அதை மாணவர்கள் மத்தியில் எடுத்துச்செல்பவர்கள் ஆசிரியர்கள்தான். தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.

பின்லாந்து நாட்டை விட கல்வியில் சிறந்த மாநிலமாக  தமிழகத்தை மாற்றுவோம். முதல்வர் ஒப்புதலை பெற்ற பிறகு ஒரு வாரத்தில் பின்லாந்து நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் அனுப்பப்படும். தொல்காப்பியம் உள்ளிட்ட நூல்கள் பின்லாந்து நூலகங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

4 comments:

 1. Each teacher need 1set of new textbooks first

  ReplyDelete
 2. Teacher s ellam panam illama irukkanga athanala cellphone, laptop ellam vankikodunga.

  ReplyDelete
 3. 1.அரசியல்வாதிகளுக்கு அடுத்த படியாக அரசு ஆசிரியர்கள் தான் பணக்காரர்கள்.
  2.நிறைய பேர் பைனான்ஸ், கந்துவட்டி, ஏலச்சீட்டு என பலதரப்பட்ட தொழில் செய்யறாங்க.
  3. அளவுக்கு மிஞ்சிய சம்பளம், சேவைகள்.
  4. பெரும்பாலான ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் படிக்கிறார்கள்.( மருத்துவம்)
  5. போனமுறை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொண்டு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் பார்த்து கொண்டும், ஏய் என் பிள்ளை அந்த ஸ்கூல்ல படிக்கிறான், இந்த காலேஜில் படிக்கிறாள் என பேசி ஜாலியாக என்ஜாய் பண்ணினார்கள்.
  4.பலபேர் தேர்வு எழுதி டெட் பாஸ் செய்து வேலை இல்லாமல் வீட்டிலும், சமுதாயத்திலும் மரியாதை இல்லாமல் அசிங்கபட்டு வாழ்கிறோம்.
  4.10,000 ரூபாயில் தற்காலிக ஆசிரியர் நியமனம் என உங்களை பயமுறுத்த எங்களை வைத்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது நமது அரசு.
  மீண்டும் போராட்டம் அரசு பள்ளி மாணவர்கள் நிலை?

  ReplyDelete
 4. Tet தேர்வு மூலமாக பணியில் சேர்ந்தவர்களில் பலர் ஓட்டை குடிசையில் பிறந்து பிச்சை மட்டும் எடுக்காமல் படித்து தேர்வானவர்கள்.. விவரமில்லா அப்பாவி பெற்றோரை விட்டு வட மாவட்டங்களில் ஏதோ ஒரு பள்ளியில் அனாதையாக அதே நேரத்தில் உண்மையாக உழைத்து வருகிறார்கள்.. ஆனால் அதே ஊரில் பிறந்து அங்கேயே பள்ளியில் ஆசிரிய ஆசிரியை என்ற போர்வையில் வலம் வருபவர்கள் பரம்பரையாகவே கொழுத்த கோடீஸ்வரர்களாகவும், பெரும் நிலக்கிழார்களாகவும், கந்து வட்டி கும்பலாகவும் விளங்குவதை பார்க்க முடிகிறது. அதில் பல மனநோயாளிகளும் ஆசிரியைகளாக உள்ளனர்.. வெளியூர் ஆசிரிய ஆசிரியைகளிடம் அவர்களின் வெளியூர் நிலை, வறுமை, குடும்பப் பொறுப்பு, எதிர்கால வாழ்க்கை மீதான அக்கறை இவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏளனம் செய்து மன உளைச்சல் கொடுத்து தினமும் அழவைத்து அதை பார்த்து ரசிக்கும் அந்த மனநோய் பிடித்த ஆசிரியைகளுக்கு தான் எல்லா சலுகைகளும் உள்ளது.. பென்ஷன் திட்டத்தில் கூட வருது.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி