NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2019

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைப்பதில் சிக்கல் : யாரும் கண்டு கொள்ளாததால் மாணவர்கள் ஏமாற்றம் .


2016,2017,2018 ம் கல்வி ஆண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களனது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

THERE IS NO SCHEME AVAILABLE

என்றே வருகிறது விண்ணப்பத்தினை SUBMIT செய்ய முடியவில்லை.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக இதே பிரச்சினை

கண்டுகொள்ளுமா??? பள்ளிக் கல்வித் துறை

*🛑NMMS -🛑 ஊக்கத்தொகை National Scholarship Portal மூலம் விண்ணப்பதில் உள்ள சில  பிரச்சனைகள், தீர்வுகள், தீர்க்க முடியாத தொழில்நுட்ப பிரச்சனைகள்.....*


*👉சில தெளிவுகள்:*
1. National Scholaship Portal (NSP) மூலம் ஒரு மாணவர் ஒரு திட்டத்தின் ஊக்கத்தொகை மட்டுமே பெற முடியும்.

2. இது மத்திய அரசால் மாணவர்களுக்கு நேரடியாக பண பலன் கிடைக்க நிர்வகிக்கப்படும் வலைதளம். தொடக்ககல்வி முதல் கல்லூரி வரை உள்ள அனைத்து ஊக்கத்தொகை சார்ந்த திட்டங்களுக்கும் ஒரே வலைத்தளம்...

3. ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களுக்கு பண பலன் பெற்று வழங்க வேண்டும்.

4.இந்த portal மூலம் தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் கீழ் சிறுபான்மை மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் NMMS தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திட்ட உதவி தொகை விண்ணப்பித்து பெற்று நேரடியாக மாணவனின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.

5. ஏற்கனவே தொடக்ககல்வி முதல் தான் சிறுபான்மை வகுப்பினை சார்ந்ததின் காரணமாக NSP மூலம்
( Minority Scholarship)( வருடத்திற்கு 1000 ரூ) திட்டத்தின் கீழ் பணம் பெற்று வரும் ஒரு மாணவன் தன்னுடைய பழைய விண்ணப்பத்தை நீக்கி விட்டு அதனை விட பண பலன் அதிகம் உள்ள NMMS தேர்ச்சிக்கான (வருடத்திற்கு 12000) விண்ணப்பித்து பணம் பெற்று கொள்ளலாம்.. (ஆனால் முடியவில்லை)

6. இது மாணவனின் ஆதார் அட்டை  வங்கிகணக்கு எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் இணைந்த ஒரு விண்ணப்ப முறை..

7. NMMS தேர்வில் 2017- 18 க்கு முன்னால் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வருடத்திற்கு 6000 தொகையும் அதற்கு பின்னால் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12000 தொகையும் 4 வருடங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

8. Fresh registration செய்தவர்கள் ஓவ்வொரு வருடமும் renewal செய்ய வேணடும்.

*👉NMMS பணம் கிடைக்காமல் போக காரணம்..*

1. ஒவ்வொரு வருடமும் 8 ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் அதே பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்றால் எளிதாக மாணவனை அடையாளம் கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.

2. ஆனால் 8 ம் வகுப்பு நடுநிலை பள்ளியில் பயின்று வேறு பள்ளியில் போய் சேரும் மாணவன் NMMS தேர்ச்சி பெற்று இருப்பதை அந்த புதிய பள்ளி ஆசிரியர்கள் உறுதி செய்யாமல் இருப்பதன் மூலம் விண்ணப்பித்து பெறுவதில் சிக்கல் உள்ளது..

3. பல மாணவர்களுக்கு தான் NMMS தேர்ச்சி பெற்றுள்ளோம் என்பதே தெரியாமல் உள்ளது. இது புதிய பள்ளி மாறுவதில் உள்ள பிரச்சினை..

4. .மேலும் 11 மற்றும் 12 படிப்புக்கு வேறு பள்ளிக்கு செல்லும் போது ஏறத்தாழ முற்றிலுமாக மாணவனுடைய renewal விடுபட்டு போகிறது..

5. முனைப்புள்ள ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் இருந்து renewal மற்றும் fresh application செய்து வருகிறார்கள்..

6. வங்கி கணக்கு எண் தவறு மற்றும் ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளதும் ஒரு காரணம்.

*தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்ச்னைகள்:*

1. சிறுபான்மை மாணவர்கள் NMMS தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு Minority Scholarship திட்டம் மட்டுமே NSP ல் விண்ணப்பிக்க முடிகிறது.. 2015-16 முதல் ஏராளமான மாணாக்கர்கள் online ல் விண்ணப்பிக்க இயலாமல் உள்ளனர்...

2. 2015- 2016 முதல் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு offline வழியில் விண்ணப்பித்தாக கூறி சில மாணவர்களுக்கு மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது... சில மாணவர்களுக்கு அதுவும் இல்லை.. தொழில் நுட்ப காரணங்களால் விண்ணப்பித்து பணம் பெறாத மாணவர்களுக்கு பணம் கிடைக்குமா? இன்று வரை அவர்களால் விண்ணப்பிக்க இயலவில்லை...

3. மாணவனின் பெயர் ஆதார் படி NMMS தேர்ச்சி அறிக்கையில் இருந்தால் ஆதார் மூலம் NSP ல் NMMs  விண்ணப்பிப்பதில் எந்த பிரச்ச்னையும் இல்லை...

4. பெயர் மாற்றம் இருந்தால் விண்ணப்பிக்க இயலவில்லை... There is no scheme to apply for the information provided  என்று வருகிறது..

5. இரண்டு ஆண்டுகளாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், renewal விடுப்பட்ட மாணவர்கள் ,fresh post metric NMMS விண்ணப்பிக்க இயலவில்லை..

6. இந்த பிரச்சினை தீர்க்க இயக்குநர் அய்யா  சுற்றறிக்கை அனுப்பிய குறிப்புகளில் ஆதார் மூலம் விண்ணப்பிக்க இயலவில்லை எனில் விண்ணப்பத்தை நீக்கி விட்டு மீண்டும் விண்ணப்பிக்கவும் என்று கூறியுள்ளார்.. மீண்டும் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறவில்லை.. குறிப்புக்கள் பின்பற்றினால் விண்ணப்பதில் எந்த பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் விண்ணப்பிக்க இயலவில்லை...

7. ஆகவே அனைத்து மாணவர்களும் NMMS விண்ணப்பிக்க, விடுப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க, சிறுபான்மை மாணவர்கள் minority விடுத்து NMMS, விண்ணப்பிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலையில் அவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க ஆவணம் செய்யுமாறு சங்க நிர்வாகிகளை  பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....

8. தயவு செய்து இந்த பிரச்சனை மேல் கவனம் கொள்ள நடவடிக்கை எடுக்கவும்.

இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்கள்,  விண்ணப்பிக்க ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்... நன்றி.

மோ.பிரபாகரன்
பட்டதாரி ஆசிரியர்
அ.பெ.மே.நி. பள்ளி, கொரடாச்சேரி. திருவாரூர். 9566869693

6 comments:

  1. AMA BC HEAD TEACHERS KU SAMBALAM VANGUVATHE SKKALAGA IRUKKU???
    TEACHERS IKKE INTHE NILAMINA GOVT SCHOOL TOP LEARNER MANNARVARGAL ROMBA PAVAM.....

    ReplyDelete
  2. மன்னிக்க வேண்டும் . அப்படி error வருவது இல்லை. மாணவர்களின் பெயர் NMMS தேர்ச்சி பட்டியலில் உள்ளவாறு கொடுக்க வேண்டும் . மேலும் தகவலுக்கு 8883338855 க்கு தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
    Replies
    1. Nmms update செய்ய இயலவில்லை year passed 2017 2018 கடநத ஆண்டும் இந்த ஆண்டும் சேர்த்து update செய்ய வழிவகை சொல்லவும் சிவஞானம் 9003193157

      Delete
  3. பலமுறை முயன்றும் எந்தவிதமுன்னேற்றம் இல்லை nmms update செய்ய வழிவகை சொல்லவும்

    ReplyDelete
  4. siva99gnanam@gmail.com nmms update தெரியவில்லை விளக்கம் கொடுக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி