PGTRB ONLINE EXAM - தேர்வு எழுதும் மையத்தை 300 கி.மீ. தூரத்தில் அமைப்பதா?: தேர்வர்கள் குற்றச்சாட்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2019

PGTRB ONLINE EXAM - தேர்வு எழுதும் மையத்தை 300 கி.மீ. தூரத்தில் அமைப்பதா?: தேர்வர்கள் குற்றச்சாட்டு!


முதுநிலை ஆசிரியர் தேர்வில் 300 கி.மீட்டருக்குஅப்பால் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மாற்ற வேண்டும் என்றும் தேர்வர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம்பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 154 தேர்வு மையங்களில் கணினி வழியில் இந்த தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 18ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என டிஆர்பிஅறிவித்திருந்தது.

இந்நிலையில் தேர்வர்கள் விண்ணப்பித்த மாவட்டத்தில் இருந்து 300 கி.மீ தொலைவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இதுதொடர்பாக தேர்வர்கள் கூறியதாவது:கணினி வழியாக முதுகலை ஆசிரியர் தேர்வு நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. டிஆர்பி சார்பில் கணினி வழியாக முதல்முறையாக ஜூன் 23ம் தேதி நடந்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வில், 10 மாவட்டங்களில் சர்வர் சரிவர இயங்கவில்லை. இதனால்மறுதேர்வு நடத்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கைஎழுந்தது. ஆனால் சில மையங்களில் மட்டுமே மறு தேர்வு நடத்தப்பட்டது. கணினி வழியில் தேர்வு நடத்த டிஆர்பியிடம் போதுமான கட்டமைப்பு இல்லை.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் தேர்வு ஹால்டிக்கெட்டில் வேறு ஊர்களில் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விருப்ப மாவட்டங்களாக 3 மாவட்டங்களை தேர்வு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தை விருப்ப மாவட்டமாக தேர்வு செய்தவருக்கு கரூரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.கரூரை விருப்ப மாவட்டமாக தேர்வு செய்தவருக்கு சென்னையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்துள்ளனர்.

தஞ்சாவூரைசேர்ந்த ஒருவர் தேர்வு எழுத விருப்ப மாவட்டங்களாக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அவருக்கு திருப்பூரில் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளனர். இதுதேவையில்லாமல் தேர்வர்களை அலைக்கழிக்கும் செயல். எவ்வளவு பேர் சில 100 கி.மீ தூரம் சென்று தேர்வு எழுதுவார்கள் என்று தெரியவில்ைல. தேர்வு மையம் ஒதுக்கீடு செய்பவர்கள் இதுதொடர்பாக சிந்தித்து தேர்வு மையம் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். இவ்வாறு தேர்வர்கள் தெரிவித்தனர்.50 கி.மீட்டருக்குள் தேர்வு மையம்தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் கூறியதாவது:தேர்வு எழுதும் மையங்கள் சுமார் 300கிலோ மீட்டரிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். தேர்வு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ளதால், தேர்வரின் சொந்த ஊரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் தேர்வு மையம் இருப்பதை டிஆர்பி உறுதிப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் கூறினார்.

16 comments:

  1. இதாவது பரவாயில்லை எம் மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்ட சேர்த்து சேர்ந்த ஒருவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஒதுக்கப்பட்டுள்ளது இங்கே நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்வதற்கு 350 கிலோ மீட்டராக இருக்கிறது

    ReplyDelete
  2. நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்,எனக்கு சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  3. நான் மாற்றுதிறனாளி 50km க்கு அப்பால் தேர்வு மையம் ஒதுக்கியுள்ளனர்.நான் எப்படிசெல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. TRB யின் லட்சனம் கண்டனத்துக்கு உரியது. தேர்வர்களை அலட்சியம் செய்து அலக்களிப்பு செய்கிறது. நான் திருவாரூர் to சத்தியமங்கலம் செல்ல வேண்டும், 350km

    ReplyDelete
  5. வேலை கிடைத்த பிறகு 300km உள்ளே தான் வேலை பார்ப்பாங்க இல்லேனா வேலை வேண்டாம்னு சொல்லிருவாங்க அய்யோ ஹய்யோ,போங்க சார் போய் Exam ௭ழுதுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. Good answer sir ellarum nalla padeekra valiya parunga

      Delete
    2. Appo Exam next time Pakistan la vai

      Delete
  6. நாம் எந்த விதத்தில் வழக்கு பதிவு செய்தாலும் நீதிமன்றம் நாங்கள் அரசு செயல்பாடுகளில் தலையிடுவதில்லை என்ற பதில் தான்....

    ReplyDelete
  7. Enaku 200 km ..I know interested exam...

    ReplyDelete
  8. Enaku 510 Km. From kanniyakumari

    ReplyDelete
  9. Naan Dharmapuri Haanal exam center kovai Sema kadupa iruku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி