TNPSC G4 - குடியரசு தினம் குறித்த கேள்வியில் தவறு: தேர்வர்கள் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2019

TNPSC G4 - குடியரசு தினம் குறித்த கேள்வியில் தவறு: தேர்வர்கள் அதிர்ச்சி!


குரூப் 4 தேர்வில் குடியரசு தினம் எப்போது என கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் இருந்ததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் பொருத்துக வடிவில், குடியரசு தினம் எப்போது என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு 1950 ஜனவரி 26  என்பது பதில். ஆனால், கேள்வியில், அளிக்கப்பட்ட 4 விடைகளில் இந்த பதில் இல்லை. இதனால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதேபோல், ஆங்கிலத்தில் முதலாவது லோக்சபா கலைக்கப்பட்ட தேதி குறித்த கேள்வி உள்பட 4க்கும்  மேற்பட்ட கேள்விகளுக்கு தவறான பதில் இருந்ததாகவும் தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து கோவையை சேர்ந்த தேர்வர் அருண் கூறுகையில், “குடியரசு தினம் குறித்த கேள்விக்கு பதிலே இல்லை. மேலும், 1950 ஜனவரி 26 என்பதற்கு பதிலாக 4 ஏப்ரல் 1957 என கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால், குழப்பமாக இருந்தது.  இதே போல், நான்குக்கும் மேற்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது. இந்த தவறுகளுக்கு தேர்வாணையம் பொறுப்பேற்று உரிய மதிப்பெண்ணை அனைவருக்கும் வழங்க வேண்டும்” என்றார்.

3 comments:

  1. Competition exam எழுதாத பேராசிரியர்கள் question settings இப்படித்தான் இருக்கும்.

    ReplyDelete
  2. Sir my correct no of questions163/200 Any chance group4

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி