TRB தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2019

TRB தேர்வு எழுதும் தேர்வர்கள் கவனத்திற்கு...


கணினி வழி தேர்வு எழுதும் என் சக ஆசிரியர்களுக்கு
நான் TRB CS தேர்வு எழுதினேன்..
எனது அனுபவத்தை கூறுகிறேன்.

27,28,29/09/2019..தேதிகளில்
TRB தேர்வு எழுதும் நண்பர்களின் கவனத்திற்கு.. கொண்டு செல்லவே இந்த பதிவு..

 #PG_TRB_வழிமுறைகள்

1. தேர்வுகூடத்திற்கு தேர்வுகூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள Reporting Time க்கு முன்னர் சென்றுவிடவும்.

2. தவறாமல் தேர்வுகூட அனுமதி சீட்டினை எடுத்து செல்லவேண்டும்.

3. தேர்வுகூட அனுமதி சீட்டில், விண்ணப்பத்தில் ஒட்டியே அதே போட்டோ ஒன்று ஒட்ட வேண்டும்.

4. தேர்வுகூட அனுமதி சீட்டுடன் ஆடையாள அட்டை ஒரிஜினல் ஒன்றும் (விண்ணப்பத்தில் குறிப்பிட்ட அடையாள அட்டை அல்லது வேறு ஏதாகிலும் ஒன்று) எடுத்துச் செல்லவேண்டும்.

5. தேர்வுகூட அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை தவிர வேறு எந்த பொருளும் எடுத்துச் செல்லக்கூடாது.
குறிப்பாக மொபைல் போன், பெல்ட், ஆபரணங்கள், ஹீல்ஸ் செப்பல் ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது.

6. Rough work செய்வதற்கு தேர்வு கூடத்தில் பென், பென்சில், பேப்பர் ஆகியவை தரப்படும். தேர்வு முடிந்தவுடன் திரும்ப கொடுத்துவிட வேண்டும்.

7. தேர்வுகூட அனுமதி சீட்டினை தேர்வு கூடத்திலேயே வாங்கி வைத்துக் கொள்வதால், அதனை முன்கூட்டியே நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வினாத்தாள் பற்றி:

1. 150 கேள்விகள் - 180 நிமிடங்களில் இருக்கும்.

2. ஒரே நேரத்தில் ஒரு கேள்வி மட்டுமே கணினித் திரையில் காண்பிக்கப்படும்.

3. ஒவ்வொரு கேள்விக்கும் 4 options இருக்கும்.

4. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் இன்விஜிலேட்டரிடம் தங்கள் சந்தேகங்கள் அல்லது கேள்விகளைக் கேட்கலாம். தேர்வு தொடங்கிய பின்னர் எந்த கேள்விகளும் கேட்க முடியாது.

கேள்விகளுக்கு பதிலளிப்பது பற்றி:

1. உங்கள் ஸ்கிரீனில் இடது புறம் அனைத்து கேள்விகளுக்கான எண்களும் வெள்ளை நிறத்தில் காண்பிக்கும்.

2. முதல் ஸ்கிரீனில் ஒரே ஒரு கேள்வியும் அதற்கான option பதில்களும் இருக்கும்.

3. ஒரு கேள்விக்கு பதிலளிக்க, சரியான விடைக்கு முன் உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யவேண்டும். அவ்வாறு கிளிக் செய்யும்போது அந்த கேள்விக்கான எண் பச்சை நிறமாக மாறும்.

4. அடுத்த கேள்விக்கு மாற next பட்டனை கிளிக் செய்யவும். அவ்வாறு செய்யும் போது அடுத்த கேள்வியும் அதற்கான option பதில்களும் திறையில் தெரியும்.

5. இவ்வாறு NEXT பட்டனை கிளிக் செய்தால் ஒவ்வொரு கேள்வியாக வரும்.

6. முந்தைய கேள்விக்கு செல்ல previous பட்டனை கிளிக் செய்யலாம்.

7. குறிப்பிட்ட கேள்விக்கு உடனடியாக செல்ல, ஸ்கிரீனில் இடது புறம் உள்ள கேள்வி எண்களில் கிளிக் செய்வதன் மூலம் துரிதமாக அந்த கேள்விக்கு செல்லலாம். பலமுறை NEXT பட்டனை கிளிக் செய்து செல்வதால் ஏற்பாடுத் தாமதத்தை தவிர்க்கலாம்.

8. ஏதேனும் ஒரு கேள்விக்கு ஒரு பதில் அளித்தபின் அதனை மாற்ற விருப்பினால், விரும்பும் பதிலுக்கு எதிரே உள்ள புல்லட் பட்டனை கிளிக் செய்யலாம். அல்லது எந்த பதிலும் தற்போது தர வேண்டாம் என நினைத்தால் Clear response பட்டனை கிளிக் செய்யலாம்.

9. பதில் அளித்த கேள்விகளை மறு ஆய்வு செய்ய நினைத்தால், ஸ்கிரீனின் வலது மேல் புறத்தில் உள்ள Bookmark this question பட்டனை கிளிக் செய்யவும். அப்பொழுது அந்த கேள்வி நீல நிறத்தில் மாறும்.

10. பதில் அளிக்காத கேள்வி வெண்மை நிறத்திலும், பதில் அளித்த கேள்வி பச்சை நிறத்திலும், பதில் அளித்து Bookmark செய்த கேள்வி நீல நிறத்திலும், பதில் அளிக்காமல் Bookmark செய்த கேள்வி சிகப்பு நிறத்திலும் இருக்கும்.

11. அனைத்து கேள்விகளுக்கும பதில் அளித்தவுடன் done பட்டனை கிளிக் செய்யவும்.

12. அப்பொழுது மொத்த கேள்விகள், பதில் அளித்த கேள்விகள், பதில் அளிக்காத கேள்விகள் எத்தனை என்ற விவரம் வரும்

13. பச்சை நிறம், ஊதா நிறம் உள்ள கேள்விள் பதில் அளித்த கேள்வியாக கருதப்படும். வெண்மை, சிகப்பு நிறம் உள்ள கேள்விகள் பதில் அளிக்காத கேள்விகளாக கருதப்படும்.

14. மீண்டும் பதில் அளிக்கவோ, பதிலை மாற்றவோ விரும்பினால், Go to Test பட்டனை கிளிக் செய்யவும்.

15. தேர்வினை முடித்துக்கொள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும்.

Visit here - YouTube Link...

தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

15 comments:

  1. 30 minutes la 25 questions mudikanuma sr

    ReplyDelete
    Replies
    1. 180 minutes la 150 question mudikkanum.....parta pirichu time kodukka matanga

      Delete
  2. Sir, 27.09.2019 Pgtrb examla questions ella mojor subject kum entha version la irukum? Tamil or English? Plz sir.

    ReplyDelete
    Replies
    1. Physical education,biochemistry,micro biology, home science,indian culture,english- english version. Tamil- tamil version, other subjects- tamil and english version display in trb exam

      Delete
    2. No all the questions only in English read the instructions

      Delete
  3. Particulara psychology questions entha version la kepanga? Tamil or English? Plz sir

    ReplyDelete
    Replies
    1. Computer instructor exam la english la mattumthaan irunthathu

      Delete
  4. Exam date தள்ளி தான் போகும்

    ReplyDelete
    Replies
    1. Eppadi solringa exam date
      Thalli pogunu.. Omr sheet is best.. Because exam centre kitta varum..namakku question paper carbon copy kidaikkum...

      Delete
  5. எல்லாம் சரியே,
    Online examஎன்ற பெயரில் off line examsதான் எழுத வைத்தார்கள்...
    அதாவது local sever al store பண்ணி எடுத்து exams வைப்பது அந்த அந்த computer centersயே exams வைப்பதற்குச் சமம் எனில் எதற்காக Trb என்ற பொதுவாக ஒரு அமைப்பு...
    ஏன் இப்படி offlineல் எழுதும் தேர்வுகளில் எளிதாக electronic தவறுகளை மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாக நிகழ்த்தி விடுவதற்கு அதிகமாக வாய்ப்புகள் உள்ளனவே...
    இரண்டாவது..
    Trb
    எந்த விதமான தொழில்நுட்ப முன்னேற்பாடுகளையும் செய்யாமலே
    மிகச்சாதாரணமான அடிப்படைத்
    தவறுகளை செய்து, செய்து திருத்திக்கொள்ள அரசு தேர்வு முறைகள் ஒன்றும்அவர்களின் error debugging software கிடையாது....
    எல்லா இடங்களிலும் உள்ள தவறுகளை திருத்தி கலைந்து பின்பு இந்த செயல் முறைக்கு வரவும்...
    இதனால்
    ஆசிரியர்கள் தேர்வர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது என்பதை புரிந்து தெளிந்து செயல்பட வேண்டும்...

    ReplyDelete
  6. உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆனால் ஒரு கேள்வி மட்டுமே திரையில் தெரியும் என்றால் அது இருமொழியில் இருக்குமா தமிழ் & இங்கிலீஷ் அல்லது ஆங்கிலம் மட்டும் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு
      cs examஐ ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்றது.....
      பல்வேறு குளறுபடிகள்,முறைகேடுகளுக்கு மத்தியில்
      ஒரே நாள்தேர்வு online exam என்று அறிவித்து
      இரண்டு நாள்தேர்வை offlineல் நடத்தி முடித்தார்கள்...

      Delete
  7. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி