இளநிலை பட்டப்படிப்பு; மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி- ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2019

இளநிலை பட்டப்படிப்பு; மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி- ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்க திட்டம்


பொறியியல், சட்டம் உட்பட பல்வேறு துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் சிறந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மனித வளத் துறை சார்பு செயலாளர் ரத்னேஷ் குமார் குப்தா வெளியிட்ட அறி விப்பு:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமூக அறிவியல், மனிதநேயம், அறிவியல், மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளில் ஒருங் கிணைந்த முதுநிலை அல்லது இளநிலை பட்டப்படிப்பு படிக் கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இணையம் மூலம் விண்ணப்பம்
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் https://mhrd.gov.in/ என்ற இணையதளம் மூல மாக விண்ணப்பிக்கலாம். இதற்கு உயர் சிறப்பு கல்வி நிறுவன அந் தஸ்து பெற்ற கல்வி மையங் கள், மத்திய அரசின் தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

4 பருவத் தேர்வுகளில் தேர்ச்சி
விண்ணப்பிக்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது 4 பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேலைவாய்ப்பு பயிற்சிகள் டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளன. துறைகளைச் சார்ந்து மாணவர்களுக்கு 2 முதல் 6 மாதங்கள் வரை பயிற்சிக் காலம் இருக்கும். ஒரு சுற்றுக்கு 15 பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சிக் காலம் முடிந்தபின் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல் களை மேற்கண்ட இணையதளத் தில் இருந்து தெரிந்துகொள்ள லாம்.
இவ்வாறு மனித வளத் துறை சார்பு செயலாளர் ரத்னேஷ் குமார் குப்தா வெளியிட்ட அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.

4 comments:

  1. Pgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போல negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் அரை குறை subject அறிவுடன் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று விடுகிறார்கள். இதனாலேயே தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு வேலை பெற்று விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  2. Bvsc padikira students apply pannalama

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி