இடைத்தேர்தல்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் 21-ந்தேதி அரசு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2019

இடைத்தேர்தல்: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் 21-ந்தேதி அரசு விடுமுறை


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் அரசுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது. அங்கு செயல்படும் தொழில்நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும்.இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும், பக்கத்து மாவட்டங்களிலும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி