குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை பரிசீலியுங்கள் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

குரூப்-2 தேர்வு புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை பரிசீலியுங்கள் தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


குரூப்-2 தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த அப்பாஸ்மந்திரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் சமீபத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதில் புதிய பாடத்திட்டத்தின்படி 175 கேள்விகள் பொது அறிவு பாடப்பகுதியில் இருந்தும், 25 கேள்விகள் கணித பாடப்பகுதியில் இருந்தும் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் குரூப்-2 தேர்வுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

 இந்தநிலையில் பழைய பாடத்திட்டத்தில் உள்ள 100 தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டுள்ளன.அதே போல குரூப்-2 மெயின் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களை பெருமளவில் பாதிக்கும். எனவே குரூப்-2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பாடத்திட்டமுறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.முடிவில், மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

7 comments:

  1. No village student is going to be affected by this revised syllabus.Don't play politics here.Only those who lack skills will be affected.I am also from poor village family i don't find it difficult.I wholeheartedly welcome it.

    ReplyDelete
    Replies
    1. How many years you are preparing TNPSC exams sir?

      Delete
    2. I have just started preparing for group ii

      Delete
    3. Earlier attended many tnpsc exams for vain

      Delete
  2. Many idiots who dont dont English are aginst the new scheme of syllabus. Its not tamil removed, language is removed. One should know to read and write in tamil and english alone can able to attend group 2

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி