சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாள் விடுமுறை.. இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2019

சென்னை, காஞ்சிபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாள் விடுமுறை.. இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!


சீன அதிபர் - மோடி சந்திப்பு எதிரொலியால் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும் அக்டோபர் 11-13ஆம் தேதிகளில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். இதற்காக 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்-பிங்கும், பிரதமர் மோடியும் சென்னைக்கு வருகிறார்கள்.இதன் காரணமாக சென்னை தொடங்கி மாமல்லபுரம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மொத்த மாமல்லபுரமும் புதிய சாலைகளால் ரம்மியாக மாறியுள்ளது.அத்துடன் மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் சீன அதிபரின் வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறு நாள் (அக்டோபர் 11,12ஆம் தேதிகளில்) சென்னையில் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள ஜிஎஸ்டி சாலை மற்றும் மகாபலிபுரம் ஓஎம்ஆர்சாலையில்போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாள் விடுமுறையாகிறது.

Source : one India

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி