அடுத்த மாதம் வெளியாகுது வனக்காவலர் தேர்வு முடிவு - kalviseithi

Oct 14, 2019

அடுத்த மாதம் வெளியாகுது வனக்காவலர் தேர்வு முடிவு


'வனக்காவலர் பணிக்காக நடத்தப்பட்ட, ஆன்லைன் தேர்வு முடிவுகள், அடுத்த மாதம் இறுதியில் வெளியிடப்படும்' என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வுகள், இம்மாதம், 4, 5, 6ம் தேதிகளில் நடந்தன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இத்தேர்வின், மதிப்பீட்டு பணி நடந்து வருகிறது. இதன் அடிப்படையில், தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகளில், வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் ஈடுபட்டுள்ளது.

இதற்கான உத்தேச கால அட்டவணை தயாரிக்கப் பட்டுள்ளது.இதன்படி, நவம்பர் நான்காவது வாரத்தில், விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரி பார்த்தல், உடற்தகுதி ஆய்வு, உடற்தகுதி தேர்வு போன்றவை, சென்னையில்நடக்கும்.இதன்பின், நவ., 30க்குள், தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி