தீபாவளிக்கு லீவே கிடையாது! - அதிர்ச்சியில் மாணவர்கள், ஊழியர்கள்! - kalviseithi

Oct 8, 2019

தீபாவளிக்கு லீவே கிடையாது! - அதிர்ச்சியில் மாணவர்கள், ஊழியர்கள்!


இந்த வருடம் தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை அதுவும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை என்ற அறிவிப்பு மாணவர்களையும், அரசு ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வருடத்திற்கான தீபாவளி அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முதல் நாள் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் சேர்த்து மூன்று நாட்களாக விடுமுறை வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டுமே விடுமுறை நாள் என்றும், அதற்கு முன்னால் சனிக்கிழமையும், அடுத்த நாள் திங்கட்கிழமையும் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாட்கள் என செய்தி வெளியாகியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தீபாவளி ஒரு நாள் என்றாலும் அதற்கு 2 அல்லது 3 நாட்கள் முன்னதிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி விடுவது வாடிக்கை.

மேலும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் ஒருநாள் மட்டும் விடுமுறை எடுத்து சென்று வருவது மிகவும் சிக்கலான ஒன்றாகும். இதனால் இந்த தீபாவளி எப்படி அமைய போகிறதோ என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

28 comments:

 1. கல்விச் செய்தி நண்பர்களுக்கு ஆசிரியர் ஒன்றும் அதிர்ச்சி அல்ல மாணவர்களுக்கு அதிர்ச்சி என்று போடுங்கள் ஏற்கனவே ஆசிரியர்கள் வருடத்தில் பாதி நாள் கூட வேலை செய்யவில்லை என்ற வதந்தி வேற பரவிக் கொண்டுள்ளது இதில் ஆசிரியை விடுமுறை கேட்கிறார்கள் என்ற தலைப்பு சரி இல்லை என எனக்கு தோன்றுகிறது மாணவர்கள் விடுப்பு கேட்கிறார்கள் அரசு ஊழியர்கள் விடுப்பு கேட்கிறார்கள் என்று போட வேண்டியதுதானே

  ReplyDelete
 2. ஆசிரியர்களாகிய எங்களுக்கு விடுமுறை தேவையில்லை. தீபாவளி அன்று கூட பள்ளிக்கு வரத் தயார்.

  ReplyDelete
  Replies
  1. விழா காலங்களில் விடுமுறை எதற்காக்க் கொடுக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

   அப்புறம் நீங்கள் விடுமுறையே இல்லாமல் அனைத்து நாட்களும் வேலை செய்யுங்கள்.

   Delete
  2. சபாஷ் சரியான போட்டி

   Delete
  3. marimuthu ஐயா நீங்கள் சொல்வது சரிதான். எதற்கும் தயார் என்ற அர்த்தத்தில் சொன்னேன்

   Delete
 3. Adei entru!
  Ne ena leave hair kudukarathu
  Nangalae eduthukuvom

  ReplyDelete
 4. Deepavali celebrate pannathinga, porul vangathinga, poi tholaiyattum..

  ReplyDelete
 5. What about else ? Every one blame teachers.

  ReplyDelete
 6. Thank you for response my comment
  And also change the headline

  ReplyDelete
 7. இதில் அதிர்ச்சி அடைவதற்கு என்ன இருக்கிறது? இதை விட பெருசா பார்த்தாச்சு..

  ReplyDelete
 8. Modi Bhai Kita tweet pannunga...
  Leave kandipa kidaikkum...
  Namma sonna keka matanga...

  ReplyDelete
 9. விடுமுறை ஆசிரியர்ககளுக்கு தேவையில்லை.மாணவர்களுக்கு தான் தேவை.........கல்விச்செய்தியே ஆசிரியர்களை இழிவு படுத்துவது போல் செயல்படலாமா .........பார்வையை மாற்றுங்கள் ...........மாற்றி யோசியுங்கள்.... கல்விச்செய்தி EDITOR அவர்களே .............

  ReplyDelete
 10. பெரும்பாலான ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் அதாவது வெளியூரில் படிக்கிறார்கள்.அதனால் உங்களுக்கு விடுமுறை வேண்டும்.லீவு வேண்டாம் என்பது உலக மகா நடிப்புடா சாமி

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் TET TRB பாஸ் பன்னிட்டு வந்து பேசுங்க நண்பா

   Delete
  2. உங்கள் பிள்ளையை அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு மற்றவர்களை குறை கூறுங்கள் .அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஏன் காண்டு.

   Delete
  3. நாங்க டெட் பாஸ் செய்தவர்கள் தான் ஐயா.

   Delete
  4. தங்களின் மதிப்பெண் தெரிந்து கொள்ளலாமா?

   Delete
  5. நீங்க எந்த TET pass பண்ணிட்டு வந்தீங்க? Employment வந்துட்டு இவ்ளோவா...!

   Delete
  6. 2013 TET
   26.09.2014 appointment

   Delete
 11. இதுக்கும் ஒரு கேஸ் போடுங்க நாட்டாமைகளே

  ReplyDelete
  Replies
  1. அதில் என்ன தவறு இருக்கிறது அடிமைகளே????

   Delete
  2. அதுக்குதானே பள்ளிகூடம் வருகிறீர்கள் கொடுமைகளே..

   Delete
  3. பள்ளிக்கு வருவது உம்மைப் போல் அடிமையாக இருப்பதற்கு அல்ல..


   தங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும் போதும் அதனை எதிர்த்து துனிச்சலாகப் போராட வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுப்பதற்காக...

   Delete
 12. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

  for entering marks
  https://docs.google.com/forms/d/11zwTe4ePUvnjFF48ZiPVly77Zbo_-KklnfEUIp3WK_0/edit

  view scores
  https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

  ReplyDelete
 13. தேவையில்லை

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி