சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு - kalviseithi

Oct 4, 2019

சித்தா, ஆயுர்வேத படிப்புகள்: விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு


சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்து வப் படிப்புகளில் 450-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ள நிலையில், அடுத்த சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அவற்றை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது.

அதன்படி, பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைப்பதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகத்தி டம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை விண்ணப் பித்துள்ளது. ஆனால், அதன்பேரில் இதுவரை எந்த ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும், கிடைக்காவிட்டா லும் அடுத்த ஒரு சில நாள்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாரம்பரிய மருத்துவத் துறை அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எம்எஸ் (சித்தா), பிஏஎம்எஸ்(ஆயுர்வேதம்), பியூஎம்எஸ் (யுனானி), பிஎச்எம்எஸ் (ஹோமியோபதி) ஆகிய பாரம்பரிய மருத் துவப் படிப்புகளைப் பொருத்தவரை 6 அரசு கல்லூரிகளில் மொத் தம் 390 இடங்கள் உள்ளன. அதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன. . எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கையைப் போலவே சித்தா, ஹோமியோ பதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப் புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நிகழாண்டில் நீட்தரவரிசை அடிப்படையில் அப்படிப் புகளுக்கான மாணவர் சேர்க்கைகலந்தாய்வு நடைபெற்றது. அதில், அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 142 இடங்கள் நிரம்ப வில்லை .

அதேபோன்று, தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. இந்நி லையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலமாக அந்த இடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி