மாணவர்களுக்கான 'ஸ்மார்ட்' கார்டு; கல்வித்துறை அலட்சியம் - kalviseithi

Oct 29, 2019

மாணவர்களுக்கான 'ஸ்மார்ட்' கார்டு; கல்வித்துறை அலட்சியம்


ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' கார்டு எப்போது வினியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றப்பட்டதோடு, 'ஸ்மார்ட்' கார்டு, நடப்பாண்டில் வினியோ^கிக்கப்பட்டது. அதில், மாணவர் பெயர், முகவரி, ரத்தவகை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கார்டை அடிப்படையாக கொண்டே, வரும்காலங்களில் நலத்திட்ட பொருட்கள் வினியோ^கிக்க முடிவெடுக்கப்பட்டது.

நடப்பாண்டில் ஜூன் மாதமே வழங்குவதாக அறிவித்த, இந்த அடையாள அட்டை, தொழில்நுட்ப குளறுபடிகளால், கடந்த, செப். மாதம் வினியோ^கிக்கப்பட்டது. ஆறு, ஒன்பதாம் வகுப்புக்கு புதிய சேர்க்கை நடந்ததால், அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கவில்லை.

கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாகி விட்டது. புதிய மாணவர்களுக்கு, பள்ளி கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் (எமிஸ்) பிரத்யேக அடையாள எண் அளிக்கப்பட்டு விட்டது.அதில் உள்ள தகவல்களை கொண்டு, புதிய அடையாள அட்டை அச்சடிக்காமல் இழுத்தடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,' புதிய மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' கார்டு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், பள்ளிகளுக்கு வழங்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி