பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

பாடங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!


பருவமழையால் விடுமுறை விடும் சூழல் ஏற்படும் என்பதால், பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான, வடகிழக்கு பருவமழை, நாளை முதல் டிசம்பர் இறுதி வரை, வெளுத்து கட்டும் என, கணிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையால், வட மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்படுவது இயல்பு. தொடர்ந்து, பல நாட்கள் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு, மழையால் அவ்வப்போது விடுமுறை விடப்படும்.இந்தாண்டு பருவமழையால், விடுமுறை விடப்பட்டால், அதை சமாளிக்கும் வகையில், ஆசிரியர்கள் தயாராக வேண்டும் என, பள்ளி கல்வித் துறை ஆலோசனை கூறியுள்ளது.

இரண்டாம் பருவ தேர்வுகள், டிசம்பரில் நடத்தப்படும் நிலையில், அதற்கான பாடங்களை விரைந்து முடிக்க வேண்டும். பருவ மழையால் பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் பாதிக்காமல், கூடுதல் நேரம் ஒதுக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

2 comments:

  1. அதை சரி செய்ய தான் எப்படியும் சனிக்கிழமைகளில் வேலை நாட்கள் இருக்குமே அப்போ நடத்திக்கலாம் என்று சொல்வார்களே என்ன செய்வது

    ReplyDelete
  2. அதை சரி செய்ய தான் எப்படியும் சனிக்கிழமைகளில் வேலை நாட்கள் இருக்குமே அப்போ நடத்திக்கலாம் என்று சொல்வார்களே என்ன செய்வது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி