அரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2019

அரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்?


ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்வது குறித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக வரவேற்பு பெற்றிருப்பது வியப்பல்ல.*

அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது?

🎙அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது; தனியார் பள்ளிகள் போல யாருக்கும் இடமளிக்க மறுக்க முடியாது. அனைவரும் கற்கத் தகுந்தவர் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

🎙மாணவர் ஏற்புத் தன்மையைக் கருதாது கடந்த 70 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி பாடத்திட்டங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

🎙ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் கிடையாது.

🎙பல்வகுப்பு கற்பித்தலுக்கு இணங்கப் பாடத்திட்டங்கள் இல்லை. ஒவ்வொரு வகுப்புக்கு ஆசிரியர் இருந்தும் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தனிப் படிப்புக்குச் செல்வது பள்ளி நேரத்தில் கற்க இயலாமையைச் சுட்டுகிறது.

🎙இவற்றைக் கணக்கிடாது ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரம் உயரும் என்பது அடிப்படைகளை புரிந்துகொள்ளாததால் சொல்லப்படுவது,

🎙ஆசிரியர்களும் அரசு அலுவலர்கள் அவர்கள் ஆற்றுகிற பணிக்கு ஊதியம் பெறுகின்றனர்; தம் உரிமைகளை அரசுக்கு அடகுவைக்கவில்லை. ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கு உண்டு.

🎙கற்பித்தல், கற்றல் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உதவிக் கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை ஒரு பெரும் பட்டாளம் கல்வித் துறையில் இருக்கிறது.

🎙அதன் செயலின்மையே அரசுப் பள்ளிகளின் நிலைக்குக் காரணம் என்று அறிதல் வேண்டும்.

🤝தோழமையுடன்;

ச.சீ.இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர்,
சென்னை

7 comments:

  1. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி அளிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி..
    அவர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

    பெட்டி தான்.....

    ReplyDelete
  2. அரசாங்கம் தான் காரணம்....

    ReplyDelete
  3. தொடக்கப்பள்ளிகளை முறைபடுத்தாது தான் காரணம்

    ReplyDelete
  4. தன் பிள்ளைகள் செழித்து வளர ஏழை பிள்ளைகளை பணையம் வைக்கும் நாட்டாமை மற்றும் நாட்டாமைச்சிகள் தான் காரணம்..

    ReplyDelete
  5. இந்த அனைத்து சவால்களையும்,அழுத்தத்தையும் குறைக்க சிறந்த வழி அனைத்து அரசுப்பள்ளிகளையும் கணினி மயமாக்கல் செய்யவேண்டும்....
    அரசுப்பள்ளிகளை கணினி மயமாக்குவதன் மூலமாக
    பலன்
    1.அரசுப்பள்ளிகள் 
    தரம் உயரும். === மாணவர்களின் 
    எண்ணிக்கை 
    உயரும்

    2.ஆசிரியர்களின்
    வேலைப்பளு குறையும் ===ஆர்வத்துடன் 
    ஆசிரியர்
    மாணவர்கள்
    ஈடுபடுவார்கள்

    3.அரசின் கணக்கெடுப்பு,
    அரசின் நலத்திட்டங்கள்,
    அரசுத்துறை தேர்வுக்கான
    இடங்களாகப்பயன்படுத்துதல் ==== 
    ஒரு
    தடவை 
    முதலீட்டு 
    கணிணி மயமாக்குவதன் 
    மூலமாக 
    அரசும் மக்களுக்கு 
    இடையேயான 
    இடைவெளி குறையும்

    ReplyDelete
  6. ஆசிரியர்கள் என்றைக்கு அரசு கஜானாவை கொள்ளை அடிக்கும் திருடர்களாக மாறினார்ளோ...அன்றிலிருந்து ஆசிரியர் சமூகம் இன்று சமூகத்தின் கொடிய வியாதியாக மாறி உள்ளது! அவ்வளவு சுயநல வெறி!!

    ReplyDelete
  7. Arasiyalvathithan, Karanam privet school ku permission koduppathu, privet school anaithaiyum government nadathinalthan entha nilamai marum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி