மத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2019

மத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.!


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் கதர் சீருடைகளை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயின்றுவரும் மாணவ மாணவியர்களுக்கு கட்டம் போட்ட சட்டை, டவுசர், பாவாடைகளே தற்போது சீரடைகளாக உள்ளன.

இதனிடையே, நலிந்து வரும் கதர் தொழிலை மீட்டெடுக்கும் வகையில் தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு கதா் சீருடையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சிபிஎஸ்இ கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் வாரம் அல்லது மாதத்திற்கு ஒரு முறை மாணவர்கள் கதர் ஆடை அணிந்து வருவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி