பிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம். - kalviseithi

Oct 14, 2019

பிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்.


இந்திய அரசு மத்திய மனிதவள மேம்பாட்டு துறை RTE பரிந்துரைகளை சர்வ சிக்.ஷா அபியான் மூலம் நாடு முழுவதும் அமுல்படுத்தியது.  6 முதல் 14 வயதுள்ள மாணவர்கள் பயனடைய பகுதிநேர ஆசிரியர்கள் ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள் கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களில் நியமித்து கொள்ள மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான நிதி பங்களிப்பு மத்திய அரசு மற்றும் மாநில அரசு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்ட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த திட்டம் தற்போது சமக்ரா சிக்.ஷா என பெயர் மாற்றப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாடு மாநில அரசும் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க அரசாணையிட்டு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ஆகிய பாடங்களில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை மாதம் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் கடந்த 2012ம் ஆண்டு நியமித்தது.8 வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை ரூ.2700 ஊதியம் உயர்த்தி தற்போது ரூ.7700 தொகுப்பூதியமாக தரப்படுகிறது.மத்திய அரசு 7வது ஊதியக்குழு புதிய சம்பளத்தை கடந்த 2017ம் ஆண்டு அமுல்படுத்தியது. தமிழகத்திலும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் புதிய சம்பளம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால்  தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றவர்களுக்கு  30%  ஊதிய உயர்வானது இன்னும் அமுல்செய்யாமல் உள்ளனர். குறிப்பாக மத்திய அரசின் திட்ட வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் தரப்படாமல் உள்ளது.மகளிர் பணியாளர்களுக்கு 9 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு கால விடுப்பு, இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு குடும்பநலநிதி, போனஸ், EPF, ESI, மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகள் கிடைக்காமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்யவேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்த்திட முயன்று வருகின்றனர். சட்டசபையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் பகுதிநேரஆசிரியர்கள் கோரிக்கைகளை எடுத்துரைக்கின்றனர். இதன் பயனாக 2017ம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். மேலும் 3 மாதத்தில்  பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் பணிநிரந்தரம் செய்யவோ, பணிநிரந்தரம் செய்ய கமிட்டியோ அமைக்கவில்லை. இப்போது மத்திய அரசு போதுமான நிதியை தருவதில்லை, பகுதிநேர ஆசிரியர்கள்  மத்திய அரசின் திட்டவேலையில் நியமிக்கப்பட்டவர்கள், அதனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரமும், ஊதிய உயர்வும் தமிழக அரசால் செய்ய முடியாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து வருகிறார். இதனால் பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து இருக்கும் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். .இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:-

9 கல்விஆண்டுகளாக மத்திய அரசின் திட்ட வேலையில் அரசுப் பள்ளிகளில் ரூ.7700 குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறோம்.அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும்போது தொகுப்பூதிய பணி செய்துவரும் எங்களுக்கு வருடாந்திர ஊதியஉயர்வு சரிவர தரப்படுவதில்லை. இக்குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறோம். தமிழக அரசிடம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டால் மத்திய அரசு போதிய நிதி தருவதில்லை என கைவிரித்துவிடுகிறது. ஏற்கனவே சட்டசபையில் பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் உறுதிஅளித்தபடி பணிநிரந்தரம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியஅரசின் திட்டத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறோம். எனவே எங்களின் வாழ்வாதாரம் நலன் காத்திட வேண்டி பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

மத்திய அரசு மனிதவளத்துறை மேம்பாட்டுத்துறை இலவச கட்டாய கல்வியை நடைமுறைப்படுத்தி மாணவர்கள் நலன்கருதி நிதிஒதுக்கி இத்திட்ட வேலையில் பகுதிநேர ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறது, இதில் ஈடுபடுத்தப்படும் இவ்வாசிரியர்களின் நலனும் மேம்படுத்தப்படவேண்டும் என்பதை ஆராய்ந்து மத்திய அரசின் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கவும், மத்திய அரசின் புதிய ஊதிய சட்டத்தையும் பணிநிரந்தரம் செய்யும்வரை செயல்படுத்தி எங்களை பிரதமர் பாதுகாத்திட எங்கள் கோரிக்கைக்கு மனிதநேயத்துடன் பாரதப்பிரதமர் அவர்கள் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வாழ்வளிக்க வேண்டுகிறோம் என்றார்.

36 comments:

 1. செந்தில்குமார் அவர்கள் மாவட்டத்தில் இருந்து அதாவது கடலூர் மாவட்டத்தில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் நியமனம் வந்த போது அரசு தொழில்நுட்ப தேர்வு முடிக்காத ஒருவர் தற்போது வரை ஆசிரியர் பயிற்சி முடிக்காத போலி பகுதிநேர ஆசிரியர்களில் ஒருவர்....
  இப்படி போலி தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் போது பகுதிநேர ஆசிரியர்களுக்கு தலை கீழாக நின்றாலும் பணி நிரந்தரம் செய்ய முடியாது..இது சத்தியம்...

  ReplyDelete
 2. S.A.R மனிதநேயம் வேண்டும் ப்ளீஸ்

  ReplyDelete
 3. தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும் போது அவர்களை விட்டு விட்டு மற்றவர்களை மட்டும் எப்படி பணி நிரந்தரம் செய்ய முடியும்...
  மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Sir nega palaya kadhaya pesadhiga apadi qualifications pathi complaint varavumdha marupati 3 times yega certificate verification panaga sir summa manasatchi illama pesadhiga.16500 irudha naga 12000 ku vara reason adha.

   Delete
  2. பணம் மட்டுமே மூலதனமாக்கி பணியை பெற்று பல்லாயிரம் பேரை ஏமாற்றி குறுக்கு வழியில் வந்தபோது எங்கே சென்றது மனிதாபிமானம்

   Delete
  3. U r exactly right sir.. nermayana vaziyil vandha maadiri nenappu.. full and full money with illegal.. ketta na interview la select aanennu poi vera

   Delete
 4. Yevlo kenjinalum yendha government ku namba kastam theriyadhu yena namba kuda vela seiyara staffs key namba nelama puriyama yedho school la servent work vandhavaga Pola treat pandraga.idhula yenga aduthavagaluku puriyum aduthavagaluku purija dhana government ku puriyum.oru time minster sir namba sattasabaila namba la permanent pana soili ketapa yevlo kevalama oru siripu sirichi answer panaga parthigala.nambala anga work pandra sweeper work pakaravaga kuda madhikaradhila because avagala vida namba salary kamiya vagarom.romba kastam sir indha nelama yaruku varakudadhu unga muyarchiki paratukal but no use indha blog parthutu nambala kevalama pesavey comments poda oru group varum.

  ReplyDelete
 5. Namba life oru kedukata life madhil Mel poonai.pola life podhu...

  ReplyDelete
 6. அப்டியே அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம்.

  ReplyDelete
  Replies
  1. நா இந்த பதிவை போடணும்னு தான் உள்ள வந்தேன்.. நீங்க முன்னாடியே பதிவு செஞ்சுட்டீங்க..

   Delete
 7. பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்கள் தினம் ஒரு சங்கம் உதயமாகிறது....

  ஒரே ஒரு சங்கம் என்று ஒரே தலைவர் என்று உங்களுக்கு முருகதாஸ் அவர்களை ஏன் ஏற்றுக் கொள்ள மனம் இல்லை...

  போராட்டம் என்று தமிழ்நாடு திருப்பி பார்க்க வைத்த சேசுராஜ் அவர்களை ஏன் ஒரே தலைவர் என்று ஏற்றுக் கொள்ள மனம் இல்லை...

  கல்வித்துறை அமைச்சர் மட்டும் பகுதிநேர ஆசிரியர்களை திரும்பி பார்க்க நினைப்பது மட்டும் எந்த விதத்திலும் நியாயம் இல்லை....

  ReplyDelete
 8. s.a.r neenga comment panathinga

  ReplyDelete
 9. In the special teachers recruitment in part time teachers and TRB passed teachers in both categories, why this Government and Education Minister including TRB was not showing interest to clarify the problem and to take a decision, atleast if we get one yes or no clarity decision, then atleast we can get relieved from daily stress that we get or not the recruitment.

  ReplyDelete
 10. Yen appointment order vaanga pothu part time nu theriyalaya.. conform Panna tha join pannuvennu sollittu appave poga vendiyathu Thana.. lanjamum koduthu ulla vanthutu apparam Pani nirandharam nu koochal poda vendiyathu.. part time nu therinjuThana Ulla vanthenga.. mudinja Ella competitors koodavum poti potu exam eluthi pass panni apparam kelunga unga Pani nirandharatha..
  Nogama Ulla vantha exaamku padichavanoda Vali eppadi theriyum..

  ReplyDelete
  Replies
  1. Posting potapavey idhala ne government kita ketrukalamey ipo vandhu kekara yedhuku ipadi oru post kasu vagitu poduriganu apola comalaya irudha

   Delete
 11. Yen appointment order vaanga pothu part time nu therinju Thana Ulla vanthenga yen appave conform Panna tha join pannuvennu sollittu poga vendiyathu Thana.. lanjamum koduthu ulla vanthutu apparam Pani nirandharamnu koochal poda vendiyathu.. mudinja Ella competitors koodavum poti potu exam eluthi pass panni apparam kelunga unga Pani nirandharatha.. nogama exam eluthama Ulla vantha ippadi tha nadakkum..

  ReplyDelete
 12. 100 சதவீதம் பணம் கொடுத்து வந்தார்கள் என பேசுபவர்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். சிலர் பணம் கொடுத்து வந்து இருக்கலாம். சிலர் சிபாரிசில் வந்து இருக்கலாம். நேர்முக தேர்வின்மூலம் வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பணி நிரந்தரம் கோருவது அவர்கள் உரிமை. திறமை இல்லாதவர்கள் மட்டுமே பகுதிநேர ஆசிரியராக இருக்கிறார்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். எப்படியும் பணி நிரந்தரம் செய்து விடுவார்கள் என்ற ஆசையில்தான் இன்னும் பலபேர் பல இன்னல்களையும் தாங்கி வேலை செய்து வருகிறார்கள். தகுதி இல்லாதவர்களை அரசு வெளியேற்ற ஒரு வாரம் போதும். மொத்தத்தில் இந்த பணியிலும் போதிய வருமானம் இல்லாமல் வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் குடும்பம் நடத்தி வருபவர்களுக்கு தெரியும் அவர்கள் வலி. நல்லதே நடக்கும் என முயலுங்கள்.

  ReplyDelete
 13. Sari idhula kadhara yellaruku onnu soilikara yegala permanent pana engaluku spl exam vaiga naga eludhi pass pani job conform panikarom only for part time teachers idhula other person allow Panna kudadhu idhuku ok va

  ReplyDelete
  Replies
  1. Yen matha competitors vandha unganala pass Panna mudiyathunu bayama irukka.. mudinja ellarodavum poti pottu win panni kameenga..

   Delete
  2. Ungalukku Mattum exam vacha eye wash pannitu money koduthu correct pannikkalamnu thinking ah.. adhu sari money kodukkarathu ungalukku Enna pudhusa..

   Delete
  3. Idhu yenada comedy ah iruku 8 varusama work pana naga yena loose ah govt schoolteacher ku adhana rules 5 year la pass pananum illana termination nu soinaga so adhey rules yegaluku podatum kandipa others allow pana kudadhu romba nailaruku da unga neyam ye ipo spl teachers Ku exam vachagala ye thambi nee adhula pass panaalya

   Delete
  4. Appointment order eduthu paarunga.. 5 varusam kaluchu observe panrennu podave illa.. full and full temporary nu tha irrukku.. aasaikum oru alavundu

   Delete
  5. Mr arivu jeevi yela posting ku appointment order apadidha poduvaga poi check panu 2006 la appointment ana teacher orders ah

   Delete
  6. life long temporary tha adults doubt illa

   Delete
  7. Life long temporary tha adhula doubt ye illa

   Delete
 14. இவ்வளவு கூறும் பகுதிநேர சிறப்பாசிரியர்களே உங்களது பகுதிநேர இடத்தை தேர்வு எழுதியவர்கள் கொண்டு நிரப்பும் படி ஒரு கோரிக்கை வைக்க வேண்டியதுதானே தேர்வு வந்தான் எழுத மாட்டார்கள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள் இப்படி தேர்வை எழுதி காத்திருக்கும் நண்பர்களின் வாழ்க்கையை சீரழிக்க உங்களைப் போன்றவர்கள் இருக்கிறீர்கள்

  ReplyDelete
 15. tet pass pannavangaluku preference and pani nirantharm kuduinga

  ReplyDelete
 16. Naga panam kuduthu ponom job potadhula unaku doubt irukarapa ye apovey ipo pesara arivu jeevigal nadavadikai yedukala 8 varusama coma la irudhigala.ipo job conform pana keta alariga

  ReplyDelete
  Replies
  1. Neenga ippadiye koochal pottute irunga ennaikkume Pani nirandram Panna porathilla... Athu Mattum conform..

   Delete
  2. Neenga seiyara 3 half a day ku work ku indha salary ye adhigam.. ketta full day work allot pannu nu solla vendiyathu.. first indha part time posting thookkanum.. ellarum olunga padichu pass panni Vara sollanum.. appadha oc la vandhavangalukku exam eluthina Vali theriyum..

   Delete
  3. Ama ivaru katiruka office la naga vela pakarom paru ivaru apadiye soili kilichitaru poi velaya paru naga yena vela pakarom nu yegaluku theriyum

   Delete
  4. En office la join pandrathukke oru thaguthi venum.. unna maadiri part time job ke lanjam kudyukkara unakku adhukkana thaguthi kidayathu..nee innum govt kitta beg pannitu irukka vendiyathu tha..

   Delete
  5. Veeti office ku yena thaguthi venum

   Delete
 17. Right Nalla Amount Varapokuthu Kallvi thuraikku.......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி