Flash News : Public Holidays List 2020 - TN Gov Published - GO No : 762 , Date : 22.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2019

Flash News : Public Holidays List 2020 - TN Gov Published - GO No : 762 , Date : 22.10.2019


2020 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பான பின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என 2020-ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில் 7 நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. தமிழக அரசு, 2015-ம் ஆண்டில் 24 நாட்களும், 2016-ம் ஆண்டில் 23 நாட்களும், 2017-ம் ஆண்டில் 22 நாட்களும், 2018-ம் ஆண்டில் 23 நாட்களும், 2019-ம் ஆண்டில் 23  நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த 2020-ம் ஆண்டிற்கும் நடப்பு ஆண்டை போலவே, 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.

ஆனால், இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை பொன்று 2020-ம் ஆண்டில் வேறு நாட்களிலும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தவிர, இயற்கை  சீற்றம், மாவட்ட பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படும்.  அனைத்து ஞாயிற்று கிழமைகளும், அரசின் விடுமுறை நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி