School Morning Prayer Activities - 15.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2019

School Morning Prayer Activities - 15.10.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.10.19

திருக்குறள்


அதிகாரம்:வாய்மை

திருக்குறள்:295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

விளக்கம்:

உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

பழமொழி

Abused patience turns to fury.

 சாது மிரண்டால் காடு கொள்ளாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்

2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வி அவசியம் ..ஆனாலும் வாழ்வின் மனிதம் ஓங்கவே கல்வி அவசியமாகிறது.

--- Dr. இராதாகிருஷ்ணன்

பொது அறிவு

அக்டோபர் 15-
இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .

1. கண் பார்வையற்றவர்களுக்கு  உதவும், அடையாளச் சின்னம் எது?

 வெண்மை நிறப் பிரம்பு.

2.மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பெற்ற விருதுகள் யாவை?

பத்ம பூஷன் (1981), பத்ம விபூஷன் (1990),
பாரத ரத்னா (1997),
ஹூவர் பதக்கம்(2009),
என்.எஸ்.எஸ்.வான் புரான் பதக்கம்.

English words & meanings

* Gasoline - refined petroleum used as fuel, petrol. புதை படிவ எரி பொருள். பெட்ரோல். இது எளிதில் ஆவியாகும் தனமை உடையது.
சுற்று சூழல் மாசு பாட்டுக்கு இது ஒரு காரணம்.

* Gaseous state - having the characteristic of gas. வாயு நிலை.

ஆரோக்ய வாழ்வு

பப்பாளிப்பழம் சிறுநீரைப் பெருக்கும். உடலை பலமாக்கும் .வைட்டமின் 'ஏ' அதிகம் உள்ளதால் கண்பார்வை தெளிவடையும். மாலைக்கண் நோய் குணமாகும்.

Some important  abbreviations for students

• pt. - pint.

• qt. - quart

நீதிக்கதை

சோம்பேறிக் கழுதைக்கு கிடைத்த தண்டனை

ஒரு பண்ணையில் ஆண் கழுதையும், பெண் கழுதையும் வளர்ந்து வந்தன. ஆண் கழுதை கடுமையாக உழைத்து பண்ணைக்குள் கொண்டு செல்ல வேண்டிய சரக்குகளை முதுகில் சுமந்து செல்லும். மாலையில் காய்ந்த புல்லை மேய்ந்து பசியாறும்.

பெண் கழுதை எந்த வேலையும் பார்க்காமல் பசுமையாகக் கிடைக்கும் புல்லைத் தின்று விட்டு, தொழுவத்தில் தூங்கி விடும். இப்படியே வேலை பார்க்காமல் பொழுதை கழித்தது.

ஒருநாள் உழைத்த களைப்புடன் சோர்வாக ஆண் கழுதை வந்தது. ஆண் கழுதையைப் பார்த்து பெண் கழுதை உன்னைப் பார்க்கவே பாவமாக இருக்கிறது! என கிண்டல் செய்தது. என்ன செய்வது உழைத்தால் தான் முதலாளி விடுவார்! என்றது ஆண் கழுதை. இதைக் கேட்டதும் பெண் கழுதை சிரித்தது.

ஏன் சிரிக்கிறாய்?

அதற்கு பெண் கழுதை பண்ணையாள் வந்து உன் கயிற்றினை அவிழ்த்து விட்டதும், உடனே நீ வேலை செய்யப் போய் விடுவாய். நான் போக மாட்டேன்!அப்படியே படுத்திருப்பேன். நான் எழவில்லை என்றதும் சாட்டையால் நான்கு அடி அடிப்பான். பிறகு என்னை விட்டு விட்டுச் சென்று விடுவான்! நீயும் அதுபோல சண்டித்தனம் செய்து விடு. உன்னையும் பண்ணையாள் விட்டுவிட்டுப் போய் விடுவான் என அறிவுரை வழங்கியது பெண் கழுதை.

காலைப் பொழுது வேலைக்குச் செல்லும் நேரம் ஆனதும், பண்ணையாள் வந்தான். வழக்கம் போல் ஆண் கழுதையைப் பிடித்துக் கொண்டு செல்ல முயன்றான். ஆனால், ஆண் கழுதை படுத்துக்கொண்டு சண்டித்தனம் செய்தது. பண்ணையாள் சாட்டை எடுத்து அடித்தும் பார்த்தான். ஆண் கழுதை எழவில்லை.

பண்ணையாள் முதலாளியிடம் சென்று, அய்யா! இந்த ஆண் கழுதை இன்று சண்டித்தனம் செய்கிறது! என்றான். சரி பரவாயில்லை. இன்னைக்கு ஆண் கழுதைக்கு ஓய்வு கொடுத்துவிடு. தினமும் நன்றாகச் சாப்பிட்டுக் கொழுத்து சும்மா இருக்கும், அந்தப் பெண் கழுதையை அடித்து இழுத்துப் போ! என்றார்.

பண்ணையாளும் வந்து ஆண் கழுதை சாப்பிட பசும் புல்லை வைத்துவிட்டு பிறகு, பெண் கழுதையை இழுத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினான். கெட்டதை சொல்லிக்கொடுக்கப் போய் தன்னுடைய பிழைப்பே போய் விட்டது என்று வருந்தியது பெண் கழுதை.

நீதி :
சோம்பேறியாக இருத்தல் கூடாது.

இன்றைய செய்திகள்
15.10.19

* இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு 2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான அணுகுமுறைகளை வழங்கியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

* வரைவு வாக்காளர் பட்டியல் நவ. 25-ல் வெளியீடு: பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* மலேசியாவில் நடைபெறும் 9வது சுல்தான் ஆப் ஜொகோர் கோப்பை ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா - மலேசியா அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் இந்திய அணி  4 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக
 இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

🌸 The 2019 Nobel Prize in Economics has been announced for 3 persons including Indian Abhijit Banerjee.  It was awarded for him for his approaches to alleviating poverty worldwide.

 🌸 Draft Voter List Wil be released on Nov 25. Ten IAS officers were assigned to check the list.

 🌸The Ministry of Human Resource Development has said that Tamil Nadu has the highest number of doctorate students  in comparison with other Indian states.

 🌸 In the 9th Sultan of Johor Cup Junior Men's Hockey Tournament in Malaysia, the Indian team won the match against Malaysia by 4-2.

🌸  Former India captain Sourav Ganguly has been selected as the Head of Indian Cricket Board.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி