School Morning Prayer Activities - 16.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2019

School Morning Prayer Activities - 16.10.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.10.19

திருக்குறள்

அதிகாரம்:வாய்மை

திருக்குறள்:296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

விளக்கம்:

ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

பழமொழி

Anger is sworn enemy .

 தீராக் கோபம் போராய் முடியும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்

2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

சமூகத்தை ஒன்றுபடுத்த வைக்கும் சக்திதான் தர்மம்.ஒன்றுபட தூண்டும் சக்தியே கல்வி.

--- கலாம் அவர்கள்

பொது அறிவு

அக்டோபர் 16 இன்று உலக உணவு தினம்

1. 'இந்தியாவின் உணவுச் சாலை' என அழைக்கப்படும் மாநிலம் எது?

 பஞ்சாப்.

2. சிறுகுடலில் உணவு எவ்வளவு மணி நேரம் தங்கி இருக்கும் ?

 சுமார் 6 முதல் 8 மணி நேரம்

English words & meanings

1.Horticulture - the art of garden cultivation and management.
தோட்டக்கலை. இது வேளாண்மையின் ஒரு பிரிவு ஆகும். இது கலை அறிவியல் தொழில் நுட்பம், அலங்கார செடிகள்,தோட்டகலை வடிவமைப்பு பற்றிய படிப்புகளை கொண்டது.

2.Hover- remain or circle in one place  in the.
air.
ஆகாயத்தில் வட்டம் இடுதல்

ஆரோக்ய வாழ்வு

பப்பாளிக்காயை சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும்.

Some important  abbreviations for students

• Ave. - Avenue.

• Rd. - Road

நீதிக்கதை

தங்கத்தூண்டில்

ஒரு ஊருல ரமேஷ், சுரேஷ் அண்ணன், தம்பிகள் இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் மீன் பிடிச்சு வாழ்க்கை நடத்துனாங்க. ஒரு நாள் மதியம் அவங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போது பிச்சைக்காரன் ஒருத்தன் அங்கே வந்தான். எலும்பும் தோலுமாக இருந்த அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்துச்சாம்.

அந்த பிச்சைக்காரன் அவங்ககிட்ட சாப்பிட்டு நாலு நாளாச்சு. பசிக்குது... எதாவது தாங்கன்னு கேட்டான். ரமேஷ் அவனுக்கு கொஞ்சம் சாப்பாட்டை எடுத்து தந்தான். , இதை பார்த்த சுரேஷ். , அண்ணா! இதுப்போல சோம்பேறிங்ககிட்ட இரக்கம் காடாதனு, தடுத்தான்.

அதை கேக்காம ரமேஷ் சாப்பாட்டை குடுத்தான். அடுத்த நாளும் அதே போல சாப்பிடுற நேரத்துல பிச்சைக்காரன் வந்தான். திரும்பவும் வந்ததுனால சுரேஷ்க்கு கோவம் வந்து டேய்! சோம்பேறி பையா! அடுத்த முறை உன்னை இங்க பார்த்தா தொலைச்சுடுவேன்னு கத்தினான். மூணாவது நாளும் பிச்சை கேட்டு அங்க வந்தான். அவனப்பாத்த கோபத்துல சுரேஷ் அங்கிருந்த தூண்டில் ஒன்றை எடுத்துக்கிட்டு அவனைத் ஏரிக்கரைக்கு கூட்டி வந்தான்.

இப்படி பிச்சை எடுக்குறியே! இதெல்லாம் ஒரு பிழைப்பா? உனக்கு மீன் பிடிக்க கத்துத்தரேன். இந்த தூண்டிலை வச்சு பொழைச்சுக்கோனு சொல்லி மீன் பிடிக்குறது எப்படின்னு கத்துக்கொடுத்துட்டு போய்ட்டான்.

பல நாளாக அந்த பிச்சைக்காரன் வரவே இல்ல. அவனை மறந்து போய்ட்டாங்க. ஒரு நாள் ரமேசும், சுரேசும் டிவி பார்த்துக்கிட்டு இருந்தப்போ, ஒரு அழகான குதிரை வண்டில ஒருத்தர் வந்தார். அவர் கையில தங்கத்தால் செஞ்ச தூண்டில் ஒண்ணு இருந்துச்சு. ரமேசும், சுரேசும் அவரைப் பார்த்தாங்க. தங்கத் தூண்டிலை எனது பரிசாக வச்சுக்கோனு சுரேஷிடம் குடுத்தாரு.

தன் வீட்டுக்கு வந்த பிச்சைக்காரன்தான் இவன் என்று ரமேஷ்க்கு தெரிஞ்சுது. அவனுக்கு சரியான கோவம். நீ சாகப் பிழைக்க இருந்தப்போ உனக்கு சாப்பாடு குடுத்து காப்பாத்தியது நான். எனக்குத்தான் இந்தத் தங்கத் தூண்டிலை தரனும். எனக்குத் தா என்று கத்தினான். ஆனால், அவரோ, இது உங்க தம்பிக்குத்தான் சேரனும்ன்னு சொன்னார். இதை ரமேஷ் கேட்காம வழக்கை கோர்டுக்கு கொண்டு போனான். நடந்ததை எல்லாம் விசாரிச்சார் ஜட்ஜ்.

ரமேஷ்யை பார்த்து, நீ இவருக்கு சாப்பாடு குடுத்து உயிரை காப்பாத்தியது உண்மைதான். ஆனா, உன் தம்பியோ இவர் வாழ்வதற்கு வழி காட்டினார். அதைப் பயன்படுத்தி இவர் பெரிய பணக்காரராயிட்டார். நிலையான உதவி செய்த சுரேஷ்க்கு இவர் தூண்டிலை பரிசா குடுத்தது சரிதான். இந்தத் தங்கத் தூண்டில் சுரேஷ்க்குத்தான்னு தீர்ப்பு! வழங்கப்பட்டது.

நீதி :
நாம் செய்யும் உதவி அப்போதைக்கு கஷ்டம் தீர்ந்தால் மட்டும் போதாது, எப்போதும் கஷ்டம் வராதபடி உதவி செய்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

16.10.19

*களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்:அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் அப்துல் கலாமிற்கு உலக அமைதிக்கான பரிசு கொடுக்கப்பட்டது.

* வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதன் முன்னோட்டமாக, வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம் அறிவித்துள்ளது.

*திருவனந்தபுரம் மக்கள் எனக்கு பக்கபலமாக இருப்பார்கள்!' - நெகிழும் பார்வையற்ற பெண் சப்-கலெக்டர்.

*யாழ்பாணத்திலிருந்து சென்னை, திருச்சிக்கு விமான சேவை!

*உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்.

*உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்.

Today's Headlines

💐on behalf of American Indians,World Peace Award was given to  Abdul Kalam in Kalam's birthday celebration.

🌸 Due to North East monsoon there will be heavy rainfall in most districts of Tamil Nadu over the next 48 hours-- weather forecast announced.

🌸Thiruvananthapuram people will be my great  supporters - said the visually impaired Lady Sub-Collector.

🌸 Flights from Jaffna to Chennai and Trichy started.

🌸 Due to the conflict about the World Cup Final Controversy: "Super Over" Rule Changes.

🌸 India meets West Bengal today in football World Cup qualifier round.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி