School Morning Prayer Activities - 01.11.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2019

School Morning Prayer Activities - 01.11.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.11.19

திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:308

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

விளக்கம்:

பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் சுட்டெரிப்பது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

பழமொழி

CALM BEFORE THE STORM. STOOP TO CONQUER

   புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நன்றி மறப்பது நன்று அன்று.

2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.

பொன்மொழி

நல்ல நெறிகளின் தன்மையைப் பொறுத்து தான் ஒரு மனிதனின்  ஒட்டுமொத்த வளர்ச்சியும் அமைகிறது.
---- சர்தார் வல்லபாய் படேல்

பொது அறிவு

1. 'வீவீ' என்பது எந்த நாட்டின் முதல் குளோனிங் கன்றுக் குட்டி?

  சீனா.

2. குரங்கினங்கள் அதிகமாக வாழும் நாடு எது ?

 பிரேசில்.
English words & meanings

* Urology – study of urine; urinary tract.
சிறுநீரகமப் பை மற்றும் அதன் பாதை குறித்த படிப்பு.

* Urban - related to city, நகர்புறம்.

ஆரோக்ய வாழ்வு

கற்றாழை நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அது சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமாக வைத்து அதன் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செயல்பாடுகள் மூலம் சருமத்தை இளமையாக மாற்ற உதவுகிறது.

Some important  abbreviations for students

* PIN - Personal identification number.

* RIP - rest in peace

நீதிக்கதை

வேட்டை நாய்

வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வளர்த்தி வந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் செல்லும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக்கொண்டிருக்கும்.

வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பி வீட்டுக்கு வந்ததும், வேட்டையில் கிடைத்தை வீட்டு நாய்க்கே எப்போழுதும் அதிகம் கொடுப்பான். வேட்டை நாய் அதைப் பொருட்படுத்தவில்லை.

இதேபோல் தினமும் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வீட்டு நாய்க்கே அதிகம் கொடுத்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.

வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நான் வேட்டையில் சம்பாதித்து வருவதில் மட்டும் நீ அதிக பங்காகப் பெற்றுக்கொள்கிறாய். இது நியாயமா? என்று வருத்தத்துடன் கேட்டது.

அதைக் கேட்ட வீட்டு நாய் சிரித்துக் கொண்டே, நண்பனே! இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை. நீ என்மீது ஏன் வருத்தப்படுகிறாய். இந்தக் தவறு நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்! என்று பதில் கூறியது.

அதைக் கேட்டதும், வேட்டை நாய் எதுவும் பேசாமல், இந்த அநியாய உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து அமைதியாகச் சென்றது.

இன்றைய செய்திகள்

01.11.19

* மக்கள் நீரை சேமித்து வைக்காவிட்டால் தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனை போல சென்னை மற்றும் பெங்களூரு நகரங்கள் தண்ணீர் பிரச்னையை சந்திக்க நேரிடும் என ஜல்சக்தி துறை  அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எச்சரித்துள்ளார்.

* சமையல் அடுப்பு வெடித்து பாகிஸ்தான் ரயிலில் தீ விபத்து; குறைந்தது 74 பேர் பலி.

* குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா?  என்ற ஆரய்ச்சியின் முடிவில் இரண்டும் கலந்தது நல்லது என கண்டறிந்துள்ளனர்.

*மஹா புயல் அரபிக் கடலில் உருவாகியிருப்பதாலும், அதன் நகர்வு திசை வடமேற்காக இருப்பதாலும், தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

* தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில்  இளம் வீரர்களின் சதங்களால் எளிதாக வென்றது இந்தியா பி அணி!

Today's Headlines

🌸If the people do not concentrate on saving water soon people from Bangalore and Chennai will face the same problem as South Africa Cape Town warns Water Energy department minister Gajendrasingh Shekawath.

🌸 Due to the explosion of Cooking stove there is a fire accident in Pakistan Railways. There may be minimum of 74 casualties.

🌸 Is it good or bad to give multitasking to children? — it is both says a study.

🌸 As the cyclone Maha formed in Arabic Ocean and it's movement is towards the direction of North West there will be no much damage for Tamil Nadu says Meteorology Department.

🌸 Theothar trophy cricket Indian B won easily due to the centuries gain by young players.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி