TRB - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2019

TRB - பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு கல்லுாரிகளில் வசூல் வேட்டை!


அரசு கல்லுாரிகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான அனுபவ சான்றிதழுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 2,331 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவுக்கு, 30ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவத்துக்கு, தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள், தாங்கள் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய கல்லுாரிகளில், அனுபவ சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இந்த சான்றிதழ் தருவதற்கு, கல்லுாரிகள் தரப்பில், ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடை கேட்பதாகவும், மறைமுக கட்டணம் செலுத்தவும் வற்புறுத்தப்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன.

சில அரசு கல்லுாரி முதல்வர்கள் மற்றும் கல்லுாரி இணை இயக்குனர் அலுவலகங்களிலும், சில தனியார் கல்லுாரி முதல்வர் அலுவலகங்களிலும், வசூல் வேட்டை நடப்பதாக, பட்டதாரிகள் குமுறுகின்றனர். இதைத் தடுக்க, உயர் கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

23 comments:

  1. Pgtrb 2019 தேர்விற்கு வங்கி தேர்வை போலவே negative mark system கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் Main subject-ல் 40 mark பெற்று கொண்டு மீதி கேள்விகளுக்கு எதை select செய்தாலும் 40 mark பெற்று தகுதி இல்லாத ஆசிரியர்கள் அரசு ஆசிரியர் வேலைக்கு வந்து விடுகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி இந்த pgtrb 2019 தேர்வில் இருந்தே negative mark system கொண்டு வர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Shut up and get lost you idiot.

      Delete
    2. இது நல்லது தான். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

      Delete
    3. Ugc net la no negative marks, eluthi pass pannitu vandhu inga pesu

      Delete
    4. இந்த பைத்தியம் எல்லா செய்திலயும் வந்து இதே பதிவை போட்டுட்டு இருக்கு..

      Delete
    5. Helo sir negative Mark pota nega pass panuvigala 40Mark ethai select panunalum Mark poduvagala ipo

      Delete
    6. இவர் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம்.

      Delete
    7. நீங்க எவ்ளோ எடுத்தீங்க <10

      Delete
  2. Shut up and get lost you idiot...

    ReplyDelete
  3. பல மாணவர்கள் hard work செய்து படிக்கிறார்கள் அசிங்கப்படுத்தாதே

    ReplyDelete
  4. பல மாணவர்கள் hard work செய்து படிக்கிறார்கள் அசிங்கப்படுத்தாதே

    ReplyDelete
  5. commerce subject 69 sc vaippu erukuma?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு உள்ளது. Call. 8012381919

      Delete
  6. SUPREME COURT ORDER NO NEGATIVE MARK CORRECT ANSWER-KKU EPPADI MARK KURRAIKKA MUDIUM

    ReplyDelete
  7. Examination is alone a solution

    ReplyDelete
  8. I request the higher education minister and CM please take action against money for Trb experience certificate in private institutions

    ReplyDelete
  9. what about Assistant professor case?

    ReplyDelete
  10. NEET exam லேயே முறைகேடு செய்து மருத்துவ கல்லூரியில் சேர்கிறார்கள் . எங்கும் முறைகேடு எதிலும் முறைகேடு என்றறாகி விட்ட இச்சூழலில் , உதவி பேராசிரியர் பணிக்கு கொடுக்க படும் experience certificate ன் உண்மை தன்மை என்பது கேள்வி குறி தான் . பணம் மற்றும் அதிகார பலம் இருப்பவர்களுக்கு experience certificate எளிதாக கிடைக்கும் என்பது ஊரறிந்த விஷயம்.set ,net முடித்த அனைவரும் இந்த உதவி பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் . அப்படி இருக்கும் போது தகுதியானவர்களுக்கு போட்டித் தேர்வு வைத்து பணியிடத்தை நிரப்பாமல் ;பணி அனுபவத்திற்கும் p.hd ம் முன்னுரிமை கொடுத்து வேலை கொடுப்பது என்பது ஒரு தலைபட்சமானது .

    ReplyDelete
    Replies
    1. Not Like that, never Chance to get duplicate Experience Certificates. The DOET & RJD having all the reports about private college working faculty details, if they find any wrong data from the job seekers, they will facing court activities including the respondent (Job seeker, principal & Secretary) before applying online, all the experience and qualifications are thoroughly checked by DOET & RJD, then only they issue, no chances for duplicate cert
      Experience...getting money by college is wrongly spreading by social medias & paper cuts...one seeker want their they produce 1. College Appointment order, 2. Qualification Approval, 3. Salary accutance,
      4. Attendance Register,
      5. Bank statement by faculty
      6. Mphil viva communication
      7. Phd Viva communication, it is not simple to get easy, if RJD & DOET found single spell mistake they rejected...very very difficult to play money here...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி