TRB - சிறப்பாசிரியர் நியமனத்தில் தமிழ்வழி கல்விக்கான ஒதுக்கீட்டை மறுப்பதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2019

TRB - சிறப்பாசிரியர் நியமனத்தில் தமிழ்வழி கல்விக்கான ஒதுக்கீட்டை மறுப்பதா?


பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 தமிழக அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை உள்ளிட்ட பாடங்களுக்கான பகுதி நேர சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வானவர்களின் பட்டியலில் தமிழ் வழியில் படித்தவர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 38 ஓவிய ஆசிரியர்களின் பெயர் இப்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 பேர் தமிழ் வழியில் படித்தவர்கள். அவர்கள் மட்டுமின்றி, தமிழ் வழியில் படித்த 37 பேர் உள்ளிட்ட 76 ஓவிய ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதேபோல், இசை, தையல் உள்ளிட்ட மற்ற பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் குளறுபடிகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசுத் தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய அமைப்புகளில் இயக்குனர் நிலையிலுள்ள அதிகாரிகள் மட்டத்தில்தான் குழப்பங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். அதில் தெரியவரும் உண்மைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தமிழ்வழி சிறப்பாசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

11 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு குழப்பமா, மற்றவர்கள் யாருக்கேனும் குழப்பமா ? தேர்வு முடிவுகள் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்தும் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து கொண்டிருப்பதால், உண்மையிலேயே குழப்பத்திலும், குளறுபடியான வாழ்க்கையிலும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது சிறப்பாசிரியர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இதோ இப்போது பணி நியமணம் கிடைத்துவிடும் என ஏக்கத்துடன் காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் மட்டுமே.

    ReplyDelete
  2. ஆசிரியர்களை தேர்வு வாரிய இயக்குனர் மற்றும் தேர்வு துறை இயக்குனர் என இருவருக்கும் விசாரணை கமிஷன் வைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்..

    தேர்வு துறை இயக்குனர் தமிழா?ஆங்கிலமா?தெரியாது என்று கூறுவதும்..

    இல்லாத ஒன்றிற்கு தமிழ் வழியில் சான்றிதழ் கேட்கும் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தலைவர்...

    இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் குளறுபடி தீர்ந்து விடும்...

    ReplyDelete
  3. ஆசிரியர்களை தேர்வு வாரிய இயக்குனர் மற்றும் தேர்வு துறை இயக்குனர் என இருவருக்கும் விசாரணை கமிஷன் வைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்..

    தேர்வு துறை இயக்குனர் தமிழா?ஆங்கிலமா?தெரியாது என்று கூறுவதும்..

    இல்லாத ஒன்றிற்கு தமிழ் வழியில் சான்றிதழ் கேட்கும் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் தலைவர்...

    இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் குளறுபடி தீர்ந்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. Dear ramadoss this is not for part time. This is for full time special teacher. Ithu Kooda theriyala...ne.....

      Delete
  4. இந்த குளறுபடிகள் தீர்ந்து, நேர்மையான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிலும் தேர்வு பெற்று காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி நியமணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதா என்று தெரியப்படுத்துவும்.

    ReplyDelete
  5. ஐயா இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் posting போடவில்லை பொதுப்பிரிவில் 80 மதிப்பெண்கள் பெற்றும் இன்று வரும் நாளைவரும் என்று காத்திருப்பவர்கள் என்ன பாவம் செய்தார்கள் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டு கேஷ் போட்டு தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழவிடாமல் இருப்பவர்கள் பல பேர் இதற்கு நீங்களும் துணை போகலாமா?

    ReplyDelete
  6. மெத்த படித்த மேதாவிகளே.....PSTM ல் உள்ள பிரச்சனை ஆராய்ந்துதான் நீதிமன்றம் உத்தரவின் பேரில் மறு பட்டியல் வெளிவந்துள்ளது.....இது முற்றிலும் TRB மற்றும் அரசு தேர்வு துறையின் கவன குறைவால் நடந்த குழப்பமே.....Rs 500 பணம் செலுத்திதான் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்....PSTM என்பது போது பிரச்சனை ....இதை தீர்ப்பது TRB ன் கடமை.....ஒரு வேளை TRB செய்தது சரியென்றால் ஏன் அவர்கள் திருத்தப்பட்ட மறு பட்டியலை வெளியிட வேண்டும்....வழக்கு தொடர்ந்த தேர்வர்கள் மீது தவறு இருந்தால் TRB deformation case தொடுக்கலாம்...ஏன் செய்யவில்லை.....நியாயமான முறையில் TRB யிடம் மன்றாடி கேட்டு கதறி முறையான பதில் கிடைக்காததால்தான் இந்த வழக்கு ....இதன் பிறகாவது படித்த முட்டாலாக இல்லாமல் தவறு எங்கே உள்ளது என ஆராய்ந்து தகவல்களை பகிரவும்...நன்றி...

    ReplyDelete
  7. Hello அதிகம் படித்த அறிவாளி முதலில் நாகரிகமாக பேசுவது எப்படி என தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் c.v க்கு அழைத்தபோதே தமிழ் வழி சான்று கொடுக்க வேண்டும் அப்போது பலர் கொடுக்கவில்லை நீதி மன்றம் சொன்ன பின்பு பலர் கொடுத்தார்கள் அதனால் மறு பட்டியல் வெளியிடப்பட்டது மேலும் 2012 இல் இருந்து அந்த இடங்கள் நிரப்ப படாமல் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் அரசு அதைப்பற்றி சிந்திக்காது காலம் கடந்தால் சம்பளம் மீதி என இழுத்துக்கொண்டே தான் செல்லும் அதே போல் அதிக மதிப்பெற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள் 56,57 வயதில் தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்று இப்போது பணியில் சேரமலேயே ஓய்வு பெற்று விட்டார்கள் அவர்கள் கனவு நிறைவடையவில்லை பாவம் அவர்கள் இதை சிந்திக்க வேண்டும் மேதையே நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் என்ற முறையில் சொல்லுகிறேன் நன்றி

    ReplyDelete
  8. ஆரம்ப காலத்திலிருந்து தமிழக அரசு நடத்திய ஓவிய ஆசிரியர் பணிக்கான தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் செல்லாது என்று அரசால் தேர்வு செய்யப்பட்ட தற்போதய ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது தவறு. மேலும் தவறுகளை சுட்டிக்காட்டும்போதெல்லாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தவறு செய்தோரை தண்டிக்கநடவடிக்கை எடுக்காது குற்றவாளிகளை மறைத்து வைத்துவிட்டு அடுத்தடுத்த திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடுவதால் என்ன பயன் .கலைஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு பதில் களவாணிகளை தேர்வு செய்து விடாதீர்கள்.

    ReplyDelete
  9. அரசு தேர்வு துறை PSTM வழங்கவில்லை வழங்க இயலாது என கூறி அறிக்கை விட்டதை படிக்கவில்லையா.....மேலும் நீதிமன்றம் கூறியதை அடுத்து யாரும் PSTM தரவில்லை....அதனால்தான் Reserved என கூறி ஒதுக்கீடு செய்துள்ளார்களா என தெரியவில்லை....56 & 57 வயதில் உள்ளோம் விரைவில் ஆணை வழங்க கூறி TRB யிடம் கேளுங்கள் அய்யா....

    ReplyDelete
  10. அய்யா நாங்கள் யாரையும் குறை கூற வில்லை....PSTM சான்று அரசு தேர்வு துறையில் படித்தவர்கலால் தர இயலாது...இதை அவர்களே திருமதி வசுந்திர தேவி இயக்குநர் தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்....இதனால் பாதிக்கபட்டவர்களின் நிலைமை? ???
    இதற்கு தங்களின் பதில்....??
    நீதிமன்றம் கூறியதை ஏன் நடைமுறைபடுத்தவில்லை....??
    தாங்கள் இதை பற்றி உண்முமையான முழுமையாக தெரிந்துகொண்டு பதில் அளிக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி