13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

13,605 பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு!!


வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து தமிழகத்தில் 13,605 பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்தார்.

மதுரையில் ஒன்பதுமாவட்டங்களின் துணைகலெக்டர்கள், பி.டி.ஓ.,க் கள், சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் கல்வியறிவு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற சத்தியபிரதா சாஹூ நிருபர்களிடம் கூறியதாவது:
வாக்களிப்பது மற்றும் ஓட்டுச்சாவடிகளின் நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 13,605 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் துவக்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர், பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 

இதனால் 5 சதவீதம் ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் கேட்கும் பட்சத்தில் தேவைப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஒருசில சுயேச்சைகள் மட்டுமே கணக்கு தாக்கல் செய்யவில்லை.

 தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் அனைவருக்கும் உடன் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இணை தலைமை தேர்தல் அதிகாரி மணிகண்டன், மதுரை கலெக்டர் வினய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி