2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை எப்போது வெளியிடப்படும்?


Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது. வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.


தமிழக பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது. முன்னதாக, அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க 2017 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், விரிவுரையாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.


இதனையடுத்து அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரி்ங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்து புதிதாக காலியிடங்கள் நிரப்புவதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதுவரையில், தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்தமாக அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்திலும் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் நிறைவு பெற்று விடும். இதே போல், 2020 ஆம் ஆண்டில் எப்போது, எந்த தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது. 2020 ஆசிரியர் பணித் தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25 comments:

  1. St.Xavier's TRB Academy,
    Nagercoil, Cell: 8012381919
    PGTRB2019 தேர்வில் MATHS,COMMERCE பாடங்களில் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற எமது மாணவர்களை வாழ்த்துகிறோம்.
    PGTRB2020 தேர்வு Maths,Commerce
    பாடத்திற்கு மட்டும் Regular மற்றும் Saturday& Sunday வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. முதுகலை ஆசிரியர் தேர்வு அடுத்து கண்டிப்பாக 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு வரும். அடுத்த வருடம் தேர்வு 100% வாய்ப்பு இல்லை.ஆனால் நீங்கள் முயற்சி கைவிடாமல் எப்போதும்தேர்வுக்கு தயாராகுங்கள்.

      Delete
    2. முது நிலை பட்டதாரி அரசு ஆசிரியர் வேலை பெறும் போது salary எவ்வளவு கிடைக்கும்

      Delete
  2. ஆசிரிய நண்பர்களுக்கு வணக்கம், முதுகலை ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற குறைந்தது 1 வருடம் படித்தல் அவசியம். போராடித்தான் வெற்றி பெற முடியும். அதிர்ஷ்டம் அனைவருக்கும் இருக்காது. நான் முதுகலை ஆசிரியன் என்ற நிலையை அடைய 7 வருடம் போராடி 2017-ல் பெற்றேன். 2019 PG TRB யில்13 பேருக்கு பாடம் நடத்தி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நான் வழிகாட்டி மட்டுமே அவர்கள் போராட்டம் மட்டுமே வெற்றி பெற வைத்தது. டிசம்பர் 2020 ல் கண்டிப்பாக PG TRB உண்டு. இப்போதே படிக்க தொடங்குங்கள். நான் PG வணிகவியல் பாடத்துக்கு அடுத்த ஜனவரியில் வகுப்பு தொடங்க உள்ளேன். All the best. 9952636476

    ReplyDelete
    Replies
    1. PG TRPKKU yendhe mathiri syallabus padikkanumnu koncham solluga sir.

      Delete
  3. Prabhakar sir kandipa 2020 IL pgtrb varuma sir

    ReplyDelete
  4. Sir neenga entha dist sollaviiai sir

    ReplyDelete
  5. TRB POLYTECHNIC NOTIFICATION WILL COME ON FIRST WEEK OF DECEMBER.EXAM APRIL2020. POLYTECHNIC CHEMISTRY CLASS WILL START AT CHENNAI ON 1.12.19 ONWARDS.
    TRB POLYTECHNIC CHEMISTRY CLASS GOING ON AT KANYAKUMARI DIST.
    PG TRB CHEMISTRY CLASS WILL START AFTER 2020 NOTIFICATION.
    PROFESSIONALLY CHEMISTRY CENTRE.
    CONTACT 9884678645

    ReplyDelete
  6. 2020 april 28 முதல் 45,000 ஆசிரியர்கள் தங்கள் தகுதியை இழக்கின்றனர். This day is 2013 TeT teachers Death day. Engal vazhikaiya azhicha education Ministers;;;Vazhga ...

    ReplyDelete
    Replies
    1. Sir unmaiya. Na point difference LA erunthen. Life yea pochu. Pottithervachum vaipangala

      Delete
    2. Sir தவறு.. 2021 September. வரை validity irukku.... Certificate issue date thaan calculate செய்யணும்.

      Delete
    3. அடுத்து இரு தேர்வுகள் நடைபெற்றதே....

      Delete
  7. 2013 ku some posting pottangala illaiyaaa

    ReplyDelete
  8. Special teachers PET counselling related news sollunga sir.we are waiting waiting for this job for 2 and half years.pls sir

    ReplyDelete
  9. Dear Aspirants!

    Coaching class is going on for POLYTECHNIC TRB (ENGLISH).

    More details log on:
    www.akshiraa.com

    Contact: 9487976999

    AKSHIIRAA COACHING CENTRE

    ReplyDelete
  10. Prepare for tnpsc..trb annual plannar padi entha exam um nadakathu..2018 plannar ithuku nala example..ini trb 2020 or 2021 la varumnu solamudiyathu..so study for tnpsc group1,2 other groups and go to good job..trb ya nambuna life la kastamthan.. trb ku vilunthu vilunthu padikiringa atheamathri tnpsc kum yen padikamatingringa..?trb ya vida tnpsc is the best..

    ReplyDelete
  11. First tet pass pannunavugalukku posting potuttu athukappuram tet exam nadathalam ethukku pass pannunavugalukku kasta paduthanum

    ReplyDelete
  12. Tet exam pass panrathukku remba kasta paatu 3 year's class poi padichi Naya alanchi kozhathingala vittittu poi padichi anal athukku oru response kuda Illamasqua irukkunu remba kavalaiya irukku

    ReplyDelete
  13. Pg Geography க்கு எந்த கோச்சிங் தருகிறார் கள் ௭ன்று சொல்லுங்கள் சார்

    ReplyDelete
  14. Atlest give importance for teaching experience mark and employment card weightage mark

    ReplyDelete
  15. Pg trb tamil சிறந்த பயிற்சி நிறுவனம் இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி