2,144 ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் இழுபறி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2019

2,144 ஆசிரியர் பணியிடம் நிரப்புவதில் இழுபறி


''தமிழகத்தில் அரசு மேல், உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், கவனம் செலுத்தாத கல்வித்துறையால் மாணவர்சமுதாயம் பாதித்துள்ளதாக,'' தமிழ்நாடு மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஓய்வு மற்றும் இறப்பினால் ஏற்படும் காலி பணியிடத்தை முன்னரே கணக்கிட்டு, ஆசிரியர் பணியிட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும். சமீபகாலமாக இந்த நடைமுறை மே மாதத்தில் இருந்து காலம் கடந்து ஆக., மாதம் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக நவ.,11 ல் கவுன்சிலிங் துவக்கினர். இதில் உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்,முதுநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்ப பட்டது பாராட்டுக்குரியது.

அதே போன்று மாறுதலில் சென்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிமூப்பு படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, முதுநிலை ஆசிரியர் பணியேற்றனர்.இதற்கு பின்னரும் தமிழகத்தில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 17 பாடப்பிரிவுகளுக்கென 2 ஆயிரத்து 144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்பட்டன. இதற்கு கடந்த செப்.,ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களின், சான்றும் சரிபார்க்கப்பட்டு, பணிக்காக காத்திருக்கின்றனர்.அதே போன்று 841 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்கில் முடிவு அறிவிக்காமல் நிலுவையில் உள்ளது. இதனால் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிதாக பணியிடங்கள் நிரப்ப தடை ஏற்படும். எனவே அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் காலிபணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாகியுள்ள ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள் தேர்வானவர்களையும் நியமித்து, மேல்நிலை பள்ளி மாணவரின் நலன் காக்க வேண்டும். தமிழக கல்வித்துறை, மத்திய அரசுக்கு இணையாக தரமான புதிய பாடத்திட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், கல்வி ஆண்டின் இறுதி வரை ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மாணவர் சமுதாயத்தை பாதிக்கும் விதத்தில் உள்ளது. அரசு விரைந்து ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும், என்றார்.

42 comments:

 1. Ivanunga udane thirunthi innikke pgtrb merit list vittu nalaikku counselling nadathi Friday appointment order koduthuduvaanunga..

  ReplyDelete
  Replies
  1. இது மத்திய அரசின் முடிவு. எல்லா பணியிடங்களை பாதியாக குறைக்க வேண்டும். இதை அனைத்து துறைகளிலும் இந்த ஆட்சியில் செயல்படுத்து கிறார்கள். போஸ்டிங் போட்டாலும் 7000 சம்பளம் தான். இதை வைத்து இப்போது விற்கும் விலையில் கால் வயிறு கஞ்சி குடிக்க முடியுமா? இனி பணத்தை கொட்டி படிப்பவர்களின் எதிர்காலம்? பி.எட் படித்தவர்கள் எங்கு செல்வது? டெட் வருடாவருடம் எழுதி தேர்ச்சி பெற்று என்ன செய்யலாம் போகிறோம்? 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் தேர்வு வைத்து என்ன செய்ய போகிறோம்? எல்லாம் கேள்விக்குறிதான். வாழ்க தமிழ்நாடு.

   Delete
 2. PG selection list, May be after local body election

  ReplyDelete
  Replies
  1. 2021 இல் merit list வெளியிடப்படும்

   Delete
 3. 2019 PG TRB 25 lacks per post mosadi nadanthu irukkirathu

  ReplyDelete
  Replies
  1. 1 crore.. நானும் கேள்விப்பட்டேன்..

   ஆட மாட்டாத சிலுக்கு காலுல சுளுக்கு என்றாளாம்..

   பைத்தியம்.. படிக்க வக்கில்லை.. இங்க வந்து புரளி பேசுது

   Delete
  2. Yes,my friends were selected only merit basic...they all got posting without money...

   Delete
  3. முட்டாளே நிருபிக்க முடியுமா?

   Delete
  4. முட்டாளே நிருபிக்க முடியுமா?

   Delete
  5. முட்டாளே நிருபிக்க முடியுமா?

   Delete
  6. Pg Trb only merit so yarum panic aga venam. Relaxation irunga

   Delete
 4. நீயும் முயன்று படி தூற்றாதே

  ReplyDelete
 5. Pg trb final selection lists declare within one or two days

  ReplyDelete
 6. December month conforma appointment order sir

  ReplyDelete
 7. Ullatchi therthal munnathagavae pg teachers schools join pannura mathiri irukkum

  ReplyDelete
 8. In higher secondary school consolidated pg teachers relieve panna poranga so next month posting conform.Selected candidates don't worry

  ReplyDelete
 9. Computer science posting podunga sir...

  ReplyDelete
 10. Pg tamil case erukke anskey change panna vaippau erukku ,so lata than final list varum

  ReplyDelete
 11. Pg tamil case erukke anskey change panna vaippau erukku ,so lata than final list varum

  ReplyDelete
 12. ஒரு பிரிவு இருக்காங்க.. எக்ஸாம் தேதி வந்த உடனே இதெல்லாம் கண்துடைப்பு பணம் வாங்கிட்டு தான் posting என்று சொல்லி படிப்பவனை கெடுக்கும்.. அதையும் மீறி படித்து தேர்ச்சி பெற்றால் posting 25Lakhs 30Lakhs என்று புரளி பரப்பி திரிய வேண்டியது.. என்ன சமூகமடா இது

  ReplyDelete
 13. 2144 Pg post kooda innum post add pannuvaangalaaa...????

  ReplyDelete
 14. அன்பு நண்பர்களே.. மதிப்பெண்கமதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே வேலை கொடுப்பார்கள். ஏனென்றால் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்களை எளிதில் கணடுபிடித்துவிடலாம். இந்த முறை அனைவரின் மதிப்பெண்களும் வெளியிட்டுள்ளார்கள். யாரும் பயப்பட வேண்டாம். டிசம்பர் முதல் வாரத்தில் பணியில் சேர்வது போல் விடுவார்கள் என்று நினைக்கிறேன். யாருடைய பொய் கருத்துக்காகவும் வருந்தாதீர்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... by UK

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும். ஒரு சில தவறுகள் வந்து விட்டது. மதிப்பெண்கள் கண்டுபிடித்துவிடலாம்

   Delete
 15. பி ஜி டி ஆர் பி எப்ப பைனல் லிஸ்ட் விடுகிறோம் என்று டிஆர்பி சொன்னால் என்ன தேதியை அறிவிக்கலாம் அல்லவா மௌனம் ஏன்

  ReplyDelete
 16. Pgtrb cs exam a eluthi result varuma exam varuma nu kaathukkondu eruppavarkal eralam but case mudiuma nu paattha athu elutthutte poittu erukku so ethukku govt tha Oru nalla mudivu edukkanum reexam or case a close panni result a publish pannanum

  ReplyDelete
 17. Pg trb 2019 ,why sir with name list and with caste ooda exam result vidula?but 2017,2015,..... with name list ooda vittu irukkaanga . please answer frnds

  ReplyDelete
 18. Replies
  1. Athuku eathukku bro name and caste maraikkanum.open na Poona trb exam polama pannalamea!(2017,2015....)

   Delete
  2. Ithula edhum maraikka mudiyathu.. last time kooda employment seniority .. teaching experience mark fraud senju merit list vara vaaippu irunthuchu.. intha time only based on mark.. yaarum yaaraium emaatha mudiyathu..

   Delete
  3. PGTRB 2019 selection list released with name & caste etc.. fully selected by merit only

   Delete
 19. PG selection list released with category..

  ReplyDelete
 20. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete
 21. Which date next TNTET exam notification

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி