தையல்,ஓவிய ஆசிரியர்களுக்கு நாளை (22/11/2019) பணிநியமன கலந்தாய்வு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2019

தையல்,ஓவிய ஆசிரியர்களுக்கு நாளை (22/11/2019) பணிநியமன கலந்தாய்வு!!


ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

பள்ளிக் கல்வித்துறையில் 2019- 20-ஆம் கல்வி ஆண்டுக்கான தையல், ஓவிய ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

இதை கருத்தில் கொண்டு, போட்டித் தோ்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியா்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், கலந்தாய்வில் அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்த விவரங்களை, கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா். அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தையல், ஓவிய ஆசிரியா் பணியிடங்களுக்கு தலா 200 பேர் என மொத்தம் 400 போ் விண்ணப்பித்துள்ளனா்.

14 comments:

 1. St.Xavier's TRB Academy,
  Nagercoil,Cell: 8012381919
  PGTRB2019 தேர்வில் MATHS,COMMERCE பாடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற எமது மாணவர்களை வாழ்த்துகிறோம்.
  PGTRB2020 தேர்வு Maths,Commerce
  பாடத்திற்கு மட்டும் Regular மற்றும் Saturday& Sunday வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

  ReplyDelete
 2. Special teachers PET teacher counselling related news sollunga sir we are waiting for this job for last 2 1/2 half years.eppa counselling irrukkum pls sir

  ReplyDelete
 3. Pls fast list send pannuga. This is the opportunity to change the life of many women.u have told that tomorrow is the counseling but u didn't send the name list.

  ReplyDelete
 4. Pls send us we are waiting for it reply.

  ReplyDelete
 5. Pls send us the name list.this is the biggest achievement in many women's life.dont play in their life can any body send the name list for தையல் ஆசிரியர் job.

  ReplyDelete
 6. சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் வழி தேர்வர்களுக்கு எப்போது கலந்தாய்வு நடைபெறும் என்று சொல்லுங்கள்

  ReplyDelete
 7. 2017 tet passed candidate also waiting for job please

  ReplyDelete
 8. All District CEO office contact pannunga sir for drawing and sewing counselling ku.

  ReplyDelete
 9. Enaku intha news epotha tharium. Enaku job kidaikum. Na tailaring higher mudichiruka

  ReplyDelete
 10. Sir any information

  Regarding Special Teacher for Agriculture.

  Waiting 20 years

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி