ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி  - kalviseithi

Nov 1, 2019

ஆசிரியர் பயிற்சித் தேர்வில் 2.4 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி 


தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு எழுதிய 4,503 மாணவர்களில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக ஆரம்பப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம் நடத்த தொடக்கக்கல்வி பட்டயப் பயிற்சி (2 ஆண்டு) முடித்து தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழகத்தில் 12 அரசு, 29 அரசு நிதியுதவி மற்றும் 247 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 2019-ம் ஆண்டுக் கான தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜூன் மாதம் அரசு தேர்வுத்துறையால் நடத்தப் பட்டது. இதற்கான தேர்வு முடிவு கள் நேற்று முன்தினம் வெளி யானது. அதில் மிகவும்குறைந்தளவில் 2.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற் றுள்ளனர்.அதன்படி தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை முதலாமாண்டு மாணவர்கள் 3,000 பேர் எழுதினர். அதில் 75 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், 2-ம் ஆண்டு மாணவர்கள் 4,503 பேர் தேர்வெழுதினர்.அதில் 105 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயச் சான்று பெற தகுதி பெற்றுள்ளனர்.

விடைத்தாள் திருத்தம் உட்பட தேர்வு முறைகளில் பின்பற்றப் படும் சமீபத்திய கடும் கட்டுப் பாடுகளால் தேர்ச்சி விகிதம் குறைவதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவித்தனர்.

2 comments:

  1. தரமான மதிப்பீடு

    ReplyDelete
  2. ஏற்கனவே தகுதித் தேர்வுல தேர்ச்சி பெற்றால்தான் வேலைன்னு சொன்னீங்க. அப்படி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கல. இப்ப பால்வாடி பிள்ளைங்களுக்கு பொதுத் தேர்வு வச்சு என்னடா பண்ணப்போறீங்க. உங்க ஆட்சில தான் யாருக்கும் வேலை கொடுக்கறதே இல்ல. அப்படி கொடுத்தாலும் தொகுப்புதியம் என்று 7000 8000ம் னு கொடுத்து இளைஞர்களின் வாழ்க்கையையே பாழாக்கி நடுத்தெருவில குடும்பத்தோட நிறுத்திடுவீங்க. இதை எப்பவுமே கொள்கை முடிவா வச்சிருக்கீங்க. இப்ப அந்த பாலகர்களுக்கு வச்சு என்ன பண்ணப்போறீங்க?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி