தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2019

தமிழகத்தில் 3400 அரசுப் பள்ளிகளை மூட முயற்சி': ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!


🔹மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.*

🔹திண்டுக்கல்லில்  (சனிக்கிழமை) பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக மாவட்ட சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.*
*இதில் கலந்து கொண்டு ராமகிருஷ்ணன், "மத்திய, மாநில அரசுகளின் மோசமான கல்விக்கொள்கையின் காரணமாக தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை இழுத்து மூட அரசு தீவிரம் காட்டி வருகிறது.*

🔹அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்களின் இலவச கல்வி கேள்விக்குறியாகும். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
*2008-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர். தற்போது 15 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.*

🔹தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு என தனியாக அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால் அந்த பழங்குடியின மக்கள் வாழும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.*

🔹2008 - 09ம் ஆண்டு கண்கெடுப்புப்படி பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 42 ஆயிரம் ஆக இருந்தது தற்போது 17 ஆயிரமாக குறைந்துள்ளது. அதேபோல், ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 1 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர்.*

🔹திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.*

🔹எனவே இந்த பள்ளிகளை தரம் உயர்த்தி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.*
*இது மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கையால் குறைகிறது.*

🔹அரசு பள்ளிகள் மூடப்பட்டால் இலவச கல்வி இனி சாத்தியமில்லை. ஏழை எளிய குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். எனவே இது போன்ற மாநாடுகளை நாங்கள் நடத்துகிறோம். அரசு இந்த பள்ளிகளை மேம்படுத்திட வேண்டும். இலவச கல்வியை உறுதிப்படுத்திட வேண்டும்" என்று பேசினார்.

1 comment:

 1. St.Xavier's TRB Academy
  Chettikulam, Nagercoil.
  Cell:8012381919
  2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
  மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
  திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
  நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி