39 ஆண்டாக, 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - kalviseithi

Nov 9, 2019

39 ஆண்டாக, 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்


'சென்னை பல்கலையில், 1980ம் ஆண்டு முதல் படித்தவர்கள், 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி திட்டத்தில், 1980 - 81ம் கல்வி ஆண்டு முதல், தற்போது வரை படித்தவர்களில், யாருக்காவது சில பாடங்கள் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' இருந்தால், அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.இதற்காக, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மே மாதம், தேர்வில் பங்கேற்கலாம் என, சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னை பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பெற்று, நவ., 22க்குள் சமர்ப்பிக்கலாம். மேலும், விபரங்களை, பல்கலைக்கு நேரில் வந்தும் தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. 39 வருஷம் முன்னாடி பாஸ் பண்ணாம இப்ப பாஸ் பண்ணி இஸ்ரோ வேலைக்கு போறாரோ....😆😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி