சிறந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - kalviseithi

Nov 7, 2019

சிறந்த பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு


சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் உள்ள பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த கல்வியாண்டில் (2018 - 19) சிறப்பாக செயல்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. மாவட்டத்துக்கு தலா 4 பள்ளிகள் வீதம் 128 பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை தரப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள், இந்தக் கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

அதிலுள்ள விதிகளின்படி, சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயாரித்து நவம்பா் 10-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு பெற்றோா் ஆசிரியா் கழகத்தின் தலைமை அலுவலகத்துக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி