கலந்தாய்வில் பணிமாறுதல் ஆணை பெற்ற பின்பும் விடுவிக்கப்படாததால் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

கலந்தாய்வில் பணிமாறுதல் ஆணை பெற்ற பின்பும் விடுவிக்கப்படாததால் இடைநிலை ஆசிரியர்கள் வேதனை!!


நடந்து முடிந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் முழுமையாக காட்டப்ட்டதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கும் அருகில் உள்ள மாவட்டத்திற்கும் மாறுதல் ஆணை பெற்றனர்.

கலந்தாய்வு முடிந்து நான்கைந்து நாட்கள் ஆன பிறகும் ஆசிரியர்கள்  இன்னும் பணியில் இருந்து விடுவிக்கப்படாததால் இரண்டு நாட்களாக அலைந்து கொண்டுள்ளனர்.
அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது வட மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று செல்வதால் கல்விப்பணிகள் பாதிக்கும் சூழல் உள்ளது. எனவே அதற்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு பணியில் இருந்து விடுவிக்கப்படுவர் அல்லது இந்த கல்வியாண்டு இறுதிவரை பணியாற்ற வேண்டி வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பணிமாறுதல் ஆணை வாங்கிய பின்னரும் மனஉளைச்சலில் இருப்பதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

3 comments:

  1. DSE பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா? இல்ல வருஷம் கணக்குல இன்னும் wait பண்ணனுமா?

    ReplyDelete
  2. Appo paper 1 ku posting podungada da.

    ReplyDelete
  3. Next time ADMK 🐕 ku mattum vote podaathinga teachers.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி