இடமாறுதலில் வெளிப்படை; ஆசிரியர்கள் மகிழ்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2019

இடமாறுதலில் வெளிப்படை; ஆசிரியர்கள் மகிழ்ச்சி


ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், அனைத்து காலியிடங்களும் காட்டப்படுவதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும்.

இந்த கவுன்சிலிங்கில், ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலியிடங்களுக்கு மட்டும், பணியிட மாறுதல்வழங்கப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங், சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. கவுன்சிலிங், நவம்பர், 11ல் துவங்கியது. தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு, இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் கவுன்சிலிங் முடியவுள்ளது.இந்நிலையில், கவுன்சிலிங் முழுமையும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து இடங்களும், ஆசிரியர்களின் இடமாறுதலுக்கு காட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிப்படை தன்மையுடன் கவுன்சிலிங் நடப்பதால், ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.அதேநேரத்தில், இடங்கள் காலியாக இருந்தாலும், சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அங்குள்ள ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

14 comments:

  1. புதுசா இருக்கே..

    ReplyDelete
  2. Elementary kku next week than start aguthu

    ReplyDelete
  3. பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்பொழுது

    ReplyDelete
  4. Pls give chance for deployment teachers who appointed for kg classes

    ReplyDelete
  5. தொடக்கப் பள்ளிக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடைபெறுமா

    ReplyDelete
  6. Plz clear my doubt... Promotion kudukrangalla, avanga same school la promote ahi work panvangla or, promotion la vera schl povangla??

    ReplyDelete
  7. பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் எப்பொழுது நடைபெறும்?

    ReplyDelete
  8. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி