பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2019

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 92

பணி: உதவி பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்கள்: 19

பணி: பாதுகாவலர்

காலியிடங்கள்: 73

வயது வரம்பு

6.12.2019 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் 27 வயதுக்குள்ளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 32 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தகுதி

உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டமும், பாதுகாவலர் பணிக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வருமான விவரம்

உதவி பாதுகாப்பு அலுவலர்: ரூ.35,400 மற்றும் மத்திய அரசின் சலுகைகள், படிகள்

பாதுகாவலர்: ரூ.18,000 மற்றும் மத்திய அரசின் சலுகைகள், படிகள்

விண்ணப்பக் கட்டணம்

உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கான விண்ணப்பம் ரூ.100, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

https://recruit.barc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruit.barc.gov.in/barcrecruit/nbArchive.jsp?unit=ADV

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி