அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறைக்கு அனுமதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக மற்றும் பராமரிப்பு பணியாளர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறைக்கு அனுமதி!


அரசு பள்ளிகளில், நிர்வாகம் மற்றும் தோட்ட பராமரிப்பு பணியாளர் காலியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகம் முழுவதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில், 24 ஆயிரம் தொடக்க பள்ளிகள், 7,000 நடுநிலை பள்ளிகள், 3,100 உயர்நிலை மற்றும் 3,050 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 2.26லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

பள்ளிகளின் நிர்வாக பணி, வளாக பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், சில பள்ளிகளில் மட்டுமே ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாக பணி, எழுத்தர் போன்ற பணிகளுக்கு, ஆசிரியர்களே பயன்படுத்தப்படுகின்றனர். அதனால், பள்ளிகளில் ஆசிரியர்களின் வகுப்பு எடுப்பது பாதிக்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அனைத்து பள்ளிகளிலும், நிர்வாக பணியாளர் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, பள்ளிகளில் பதிவு எழுத்தர், அலுவலக உதவியாளர், வளாக பராமரிப்பாளர், தோட்ட பராமரிப்பாளர், காவலாளி உள்ளிட்ட பதவிகளில், புதிய ஆட்களை நியமிக்க, பள்ளி கல்வித்துறைக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

3 comments:

  1. ஐயா சிறப்பாசிரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வேலைக்காக காத்திருக்கும் எங்களுக்கு வேலை தாருங்கள்.

    ReplyDelete
  2. அரசு உதவி பெறும் பள்ளிகளில் வளாகப் பராமரிப்பாளர் பணிக்கு நியமனங்கள் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. As well as fill aided college non teaching vacancies

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி