பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குநாளை தேசிய திறனாய்வு தேர்வு  - kalviseithi

Nov 2, 2019

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குநாளை தேசிய திறனாய்வு தேர்வு 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு முடிக்கும் வரை கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் மாநில அளவில் நவம்பர் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை (நவ.3) நடைபெறுகிறது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 514 தேர்வு மையங்களில் 1,55,851 மாணவ, மாணவிகள் எழுதஉள்ளனர்.

காலை 9 முதல் 11 மணி வரை அறிவுத்திறன் தேர்வும், அதன்பின் 11.30 முதல் மதியம் 1.30 மணி வரை கல்வித்திறன் தேர்வும் நடைபெறும். மாணவர்கள் காலை 8 மணிக்குள் தேர்வு மையங்களில் இருக்க வேண்டும் என்று தேர்வுத் துறைஉத்தரவிட்டுள்ளது. திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி