ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன் - kalviseithi

Nov 3, 2019

ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர்கே.ஏ.செங்கோட்டையன்


ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில் ஏழை, எளியோர் இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் எண்ணற்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்வித் துறையில் மாணவ, மாணவிகளின் நலனுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள், புத்தகங்கள், பேருந்து பயண அட்டை, மிதிவண்டிகள், மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.53சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடமும், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.37 சதவீதம் தேர்ச்சி பெற்றுமுதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த கல்வியாளரை உருவாக்கும் உயரிய பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். அதே வேளையில், ஆசிரியர்களின் சிறு, சிறு இடர்ப்பாடுகளையும் அரசு முழுமையாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற300 பள்ளித் தலைமை ஆசியரியர்கள், தேர்ச்சி வழங்கிய 2,200 ஆசிரியர்கள் என 2,500 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்

4 comments:

 1. முதுகலை ஆசிரியர் பற்றாக்குறையினால் பட்டதாரி அசிரியர்களை Deputationல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்க அனுப்பி 4 மாதங்கள் ஆகிவிட்டது!
  அந்த பட்டாதாரி ஆசிரியர்களின் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர் இன்றி திண்டாடி வருகின்றனர்.
  இன்னும் ஆசிரியர் கலநலதாய்விற்கான அறிவிப்பினை முதலில் வெளியிடுங்கள் அதை விடுத்து ஏதோ எங்கள் மீது அதீத அக்கறை கொண்டவர் போல் பேசுவதை ஏற்க இயலவில்லை.
  உண்மையில் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுமே கற்றல் கற்பித்தலை சிக்கலாக்கிக் கொண்டே செல்கிறது. எப்போதும் உங்கள் திருநாமம் திரையில் மிண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற முனைப்பின் விளைவாகவே தங்கள் செயல்பாடுகள் தோன்றுகிறது.

  ReplyDelete
 2. Miga periya edaralae transfer thaan....epatha transfer counseling??

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி