'ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் சங்கங்களிடம் ஆலோசித்த பின் முடிவு' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2019

'ஆசிரியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் சங்கங்களிடம் ஆலோசித்த பின் முடிவு'


'ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பின், விருப்பஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவெடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே, பங்களாப்புதுார் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

உயர்நிலைப்பள்ளிகளில், ௧௦ கம்ப்யூட்டர்கள், மேல்நிலைப்பள்ளிகளில், 20 கம்ப்யூட்டர்கள் என இணைத்து,கல்வி போதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இதற்கான பணி நிறைவேற்றப்படும். அடுத்தாண்டு பள்ளி துவங்கியதும், மாணவர்களுக்கு ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில், 68 ஆசிரியர் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே, ஆசிரியர்களின் விருப்ப ஓய்வு திட்டம் (வி.ஆர்.எஸ்.,) குறித்து முடிவு எடுக்கப்படும்.

இதுகுறித்து ஆசிரியர்கள் விரும்பினால், அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதன்பின் முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

2 comments:

  1. MGR காலத்திலிருந்தே அரசியலில் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு , இளைஞர்களுக்கு வழி விட்டால் நல்லது .

    ReplyDelete
  2. சொசைட்டி லோனை வட்டிக்கு விடும் சிறப்பான தொழிலை விட்டு யாரு vRS வாங்குவாங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி