சிபிஎஸ்இ தேர்வு மாணவர்களுக்கு கால அவகாசம்  - kalviseithi

Nov 6, 2019

சிபிஎஸ்இ தேர்வு மாணவர்களுக்கு கால அவகாசம் 


சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரம் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 62 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக் கின்றனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.அதன்படி, நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் இணையதளம் வழி யாக கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் மண்டல வாரியங்களுக்கு அனுப்பின. அந்த விவரங்களை சிபிஎஸ்இ சரிபார்த்தபோது, அதில் எழுத்துப் பிழைகள் அதி கம் இருந்தன. மேலும், சில மாணவர்களின் சான்றுகள் சமர் பிக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, பொதுதேர்வுக் கான மாணவர் விவரங்களில் நவம்பர் 11-ம் தேதிக்குள் தேவை யான திருத்தங்கள் மேற்கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ காலஅவகாசம் வழங் கியுள்ளது. அதன்பிறகு அவ காசம் நீட்டிக்கப்படாது என்பதால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து பள்ளி முதல்வர்களையும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி