மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி: தமிழக அரசு அரசாணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2019

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி: தமிழக அரசு அரசாணை


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளிக்கல்வித்துறை செய்ல்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, 1200 மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதேபோல 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 2.30 மணியாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக 30 நிமிடம் சேர்த்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது

மேலும் புதிய பாடத்திட்டம் வந்துள்ளதால் கூடுதலாக தேர்வு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி என்பதால் தனியார் பள்ளிகள் கதிகலங்கியுள்ளன.

4 comments:

  1. எல்லாம் சரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைத்துவிட்டீர்களே.

    ReplyDelete
  2. Tet passed candidate ku posting podungada 1st

    ReplyDelete
  3. செய்யவேண்டியது கணினி மயம்..
    ஆனா
    தாய்மொழிக்கல்விஆர்வத்தை குறைக்கும் வண்ணம் ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் தந்து இருக்குற கொஞ்ச நஞ்ச மாணவர்களையும் பயமுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கும் வேலையை செய்கிறது அரசு....
    கேட்டால் கொள்ளை(கை)முடிவு...

    ReplyDelete
    Replies
    1. மொழிப்பற்று இதனால் பாதிக்காது; ஏனெனில் தமிழ்வழிக் கல்வியில் தானே பயில்கின்றனர்,ஆங ஆங்கில அறிவும் அவசியம் தானே!!!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி