ஷூ! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவாது...புதிய அறிவிப்பால் கல்வியாளர்கள் காட்டம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2019

ஷூ! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவாது...புதிய அறிவிப்பால் கல்வியாளர்கள் காட்டம்!!


ஓட்டுக்கட்டடம், ஒழுகும் கூரை, கழிவறை வசதியின்மை என அரசுப்பள்ளிகளில், குறைகள் ஆயிரமிருக்க, இதை நிவர்த்தி செய்யாமல், நலத்திட்ட பொருட்களுக்கே, கோடிக் கணக்கில் நிதி வீணடிக்கப்படுவதாக, கல்வியாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர, கல்வித்துறை நிதி ஒதுக்குவதில்லை. ஆனால், நலத்திட்ட பொருட்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு, அறிவிப்பு வெளியிடப் படுகிறது. பாடப்புத்தகம், நோட்டு இலவசமாக வழங்குவது வரவேற்கத்தக்கது. சைக்கிள், லேப்டாப் வினியோகிக்கும் அறிவிப்பு கூட, மாணவர்களின் நலன் சார்ந்ததாகவே கருதப்படுகிறது.ஆனால் தற்போது காலணிக்கு பதிலாக, ஷூக்கள் வினியோகிப்பதாக அறிவித்துள்ளதோடு, இத்திட்டத்திற்கு 10.90 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதற்கு, கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்து தராமல், இதுபோன்ற அறிவிப்பு வெளியிடுவதால் மட்டும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.கல்வியாளர்கள் சிலர் கூறுகையில், 'தனியார் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கில வழி கல்வி, சீருடை நிறம் மாற்றுதல், காலணிக்கு பதிலாக ஷூக்கள் வினியோகிப்பதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்காது. கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினால் மட்டுமே, அரசுப்பள்ளிகளின் தரம் உயரும். 


இதற்கு முன் உரிய அளவு இன்றி, காலணி வழங்கியதால், மாணவர்கள் பயன்படுத்த முடியாத, நிலையே ஏற்பட்டது. பல பள்ளிகளில் இன்னும் வீணாக குவிந்து கிடக்கிறது. ஷூக்களையும் இதேமுறையில் வினியோகித்தால், ஒதுக்கிய நிதித்தொகையால் பயன் ஏற்படாது. ஷூக்கள் சப்ளை செய்யும் நிறுவனம் மட்டுமே இதனால் பயன் பெறும். நலத்திட்ட பொருட்களுக்கு பதிலாக, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் கல்வித்துறை கவனம் செலுத்த வேண்டும்' என்றனர். 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கில வழி கல்வி, சீருடை நிறம் மாற்றுதல், காலணிக்கு பதிலாக ஷூக்கள் வினியோகிப்பதால், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்காது. கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினால் மட்டுமே, அரசுப்பள்ளிகளின் தரம் உயரும்; சேர்க்கையும் அதிகரிக்கும். 

கல்வியாளர்கள்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி