தொன்மைபாதுகாப்பு_மன்ற_விழா!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2019

தொன்மைபாதுகாப்பு_மன்ற_விழா!!கொண்டபெத்தான் நடுநிலைப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றவிழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. மன்றத்தின் சார்பாக கொண்டபெத்தான் பள்ளி குழந்தைகள் மதுரை உலகத்தமிழ் சங்கத்திலுள்ள கீழடி அகழ்வாய்வு கண்காட்சியினை பார்வையிடுவது என முடிவு  செய்தோம். கீழடி அகழ்வாய்வு கண்காட்சியிலுள்ள மூன்று அரங்குகளையும் பார்வையிட்டோம். #தலைமையாசிரியர்_தென்னவன் பேசுகையில்

" வரலாற்றின் பக்கங்களை புரட்டி போடும் விதமாக கீழடி அகழ்வாய்வு உள்ளது. முதல் அரங்கில் கட்டுமான பொருட்களின் மாதிரிகளும் இரண்டாம் அரங்கில் கீழடியில் கிடைத்த பொருட்களும் மூன்றாம் அரங்கில் குழந்தைகள் மகிழும் விதமாக கீழடி குழிக்குள் இறங்கும் அனுபவத்தை பெறும் வகையில் தரையில் புரஜெக்டர் மூலம் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொன்மை பொருட்களை பாதுகாக்க வேண்டும் எனக் கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி