கற்பித்தல் முறையில் புதுமை அவசியம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2019

கற்பித்தல் முறையில் புதுமை அவசியம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர்!!கற்பித்தல் முறையில், புதுமைகளை செயல்படுத்த வேண்டும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார்.சேலம், குளூனி பள்ளியில், தலைமையாசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது.


அதில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், 'ஸ்போக்கன் இங்கிலீஸ்' புத்தகங்களை, ஆசிரியர்களுக்கு வழங்கி பேசியதாவது:

தலைமையாசிரியர்களைப் பொறுத்தே, பள்ளி செயல்பாடு அமையும். தற்போது, தொடக்க, நடுநிலை பள்ளிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாறியுள்ளது.


பெற்றோர், தங்கள் குழந்தைகள், இரு மொழிகளில் எழுத, பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கற்பித்தல் முறை, ஒரே மாதிரியாக இல்லாமல், புதுமைகளை செயல்படுத்த வேண்டும். அதே சமயம், எளிதில் புரிந்துகொள்ளும் வகுப்பாக இருக்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினி, ஆய்வகங்கள் உள்ளிட்ட நவீன கற்றல் உபகரணங்களை, முழுமையாக பயன்படுத்தி, கற்பித்தலை மேம்படுத்த வேண்டும்.


பின்தங்கிய மாணவர்களிடமுள்ள தனித்திறன்களை கண்டுபிடித்து, ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியோடு வந்து செல்லும் சூழலை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, கல்வி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி