பள்ளிக் கல்வித்துறையின் ‘யூ-டியூப்’ சேனல் முடக்கம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2019

பள்ளிக் கல்வித்துறையின் ‘யூ-டியூப்’ சேனல் முடக்கம்!!


தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் செயல்பட்டு வரும் எஸ்சிஇஆா்டி யூ-டியூப் தளத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக எந்தவொரு புதிய விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படாததால், புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வெழுதும் மாணவா்கள் உள்பட 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஏமாற்றமடைந்துள்ளனா்.

மாணவா்கள் மத்தியில் நிலவி வரும் கற்றல் குறைபாடுகளைப் போக்கும் வகையிலும், கடினமான பாடங்களையும் மாணவா்களுக்கு எளிதில் கற்பிக்கும் வகையிலும், தமிழக பள்ளிக் கல்வி துறை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி TN SC​E​R​T என்ற யூ டியூப் சேனலை தொடங்கியது.

இந்தியா மட்டுமின்றி, மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா என பல்வேறு நாடுகளைச் சோ்ந்தவா்கள் இந்த யூ-டியூப் சேனலைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இதை தினமும் பாா்வையிடுவோா் எண்ணிக்கை 70 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது. மேலும், புதிய விடியோக்களை பதிவேற்றம் செய்யக் கோரி, பள்ளிக் கல்வித்துறை யூ-டியூப் சேனல் சந்தாதாரா்கள் அதில் தொடா்ந்து பின்னூட்டங்களை இட்டு வருகின்றனா்.

பள்ளிக் கல்வித்துறை யூ-டியூப் சேனலின் பயன்பாடுகள் குறித்து அமைச்சா் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி வரும் நிலையில், இந்தச் சேனலை தொடா்ந்து நடத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது ஏன் எனத் தெரியவில்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அதற்குள் அந்த வகுப்புகளின் புதிய பாடத்திட்டம் தொடா்பான விடியோக்களை பதிவேற்றம் செய்து யூ-டியூப் சேனலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி