திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2019

திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!


கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 3 கல்லூரிகளுக்கும் தலா ரூ 325 கோடி ஒதுக்கப்படுகிறது.

இதில் மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் மத்திய அரசு சார்பில் 195 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த கல்லூரிகளுடன் சேர்த்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 3 கல்லூரிகள் மூலம் தலா 150 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கெனவே 6 இடங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. St.Xavier's TRB Academy
    Chettikulam, Nagercoil.
    Cell:8012381919
    2020-ல் வரும் Pgtrb தேர்வுக்கு பயிற்சிகள் தினமும்,சனி& ஞாயிறு கிழமைகளில் கணிதவியல்
    மற்றும் வணிகவியல் பாடங்களுக்கு மட்டும் நடைபெற்று வருகிறது.
    திருநெல்வேலி,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாணவர்கள் தினமும் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    New Batches starts on: 2-12-2019
    நீங்களூம் வாருங்கள்...அரசு முது கலை ஆசிரியர் வேலை பெறலாம்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி